/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
/
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
கணிதம் - வணிகவியல் தேர்வு பரவாயில்லை! மாணவ, மாணவியர் கருத்து
ADDED : மார் 12, 2025 12:46 AM

திருப்பூர்; பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கு, கணிதம், வணிகவியல் உள்ளிட்ட தேர்வு நேற்று நடந்தது. இதில், கணிதம் மற்றும் வணிகவியல் தேர்வு எளிதாக இருந்ததாக, மாணவ, மாணவியர் கூறினர்.
தேர்வு குறித்து மாணவ, மாணவியர் கூறியதாவது:
கார்த்திக்ராஜா: கணிதத்தேர்வு மிகவும் எளிமையாக இருந்தது. எதிர்பார்த்த கேள்விகள் அனைத்தும் கேட்கப்பட்டிருந்தது.இதற்கு முன்பு நடந்த தேர்வு களில் இடம்பெற்ற பல கேள்விகள் வந்திருந்தது. கணிதம் ரொம்ப எளிதாக இருந்தது. மற்ற வகையில் வினாத்தாள் கடினம் கிடையாது.
பரமேஸ்வரன்: கணிதம் எளிமையாக இருந்தது. அனைத்துக்கும் பதில் அளிக்க முடிந்தது. இரண்டு மற்றும் மூன்று மார்க் வினாக்கள் மட்டும் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால், பதில் அளிக்கும் வகையில் இருந்தது. புத்தகத்தில் இருந்து அதிகம் இடம்பெற்றிருந்தது. கடந்த ஆண்டு பொதுத்தேர்வை ஒப்பிடும் போது, இவ்வாண்டு மிகவும் எளிமை.
தீக் ஷா: வணிகவியல் தேர்வில், இந் தாண்டு ஒரு மார்க்கில் இருந்து அனைத்தும் எளிமையாக இருந்தது. காலாண்டு, அரையாண்டு போன்ற தேர்வில் இடம்பெற்ற பல கேள்விகள் வந்திருந்தது. புத்தகத்தில் இருந்து பெரும்பாலானவை இடம் பெற்றிருந்தது. புத்தகத்தை முழுவதுமாக படித்தவர்களுக்கு மிகவும் எளிது.
அப்துல்ஹமீது: வணிகவியல் தேர்வில், புதிய வினாக்கள் அதிகம் இடம்பெற்றிருந்தாலும், யோசித்து பதில் அளிக்கும் வகையில் இருந்தது. ஐந்து மார்க் வினாக்கள் மட் டும் சிரமமாக இருந்தது. மற்றபடி அனைத்துக்கும் பதில் அளிக்கும் வகையில் இருந்தது.
'சென்டம்' எளிதல்ல!
கணித ஆசிரியர் ராஜேஸ்வரி: ஒரு மதிப்பெண்ணில், 16 கேள்விகள் புத்தகத்தில் இருந்து, நான்கு உள்ளே இருந்து கேட்டிருந்தனர். இரு மதிப்பெண்ணில், புத்தகம் முழுவதும் படித்து இருந்தால் எளிதாக அணுகியிருக்க முடியும். பாடங்களை தேர்ந்தெடுத்து படித்தவர்களுக்கு கொஞ்சம் சிரமம் ஏற்பட்டு இருக்கும். மூன்று மதிப்பெண்ணில், எளிதாக கேட்டிருந்தனர். ஐந்து மதிப்பெண்ணிலும், எதிர்பார்த்தவை வந்திருந்தது. இம்முறை மாணவ, மாணவியர் எளிதாக சென்டம் வாங்க முடியாது. அனைத்து பாடங்களையும் தரவாக படித்தவர்களுக்கு மட்டும் வாய்ப்பு.
5 மார்க் வினா கடினம்
வணிகவியல் ஆசிரியர் கவுசல்யா: ஐந்து மதிப்பெண் வினாக்கள் எதிர்பார்த்தது வரவில்லை. கொஞ்சம் கடினமாக இருந்தது. நன்றாக படிக்கும் மாணவ, மாணவியருக்கு சிரமமாக தான் இருந்து இருக்கும். இதற்கு முன்பு நடந்த தேர்வுகளில் கேட்ட வினாக்கள் வரவில்லை. ஒன்று, இரண்டுமற்றும் மூன்று மதிப்பெண் வினாக்கள் எளிதாக இருந்தது. இம்முறை வணிகவியலில் சென்டம் குறைய வாய்ப்புள்ளது.