நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர், : தொழிலாளர் தினமான மே தினம் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது.
திருப்பூர், கோவை மாவட்ட பனியன் தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா சங்க வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர் பாலசுப்ரமணியம் தலைமை வகித்தார். பொது செயலாளர் ராமகிருஷ்ணன் கொடியேற்றி வைத்தார். பொருளாளர் பூபதி, துணை செயலாளர் நாச்சிமுத்து உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
திருப்பூர் மாவட்ட எச்.எம்.எஸ்., தொழிற்சங்கம் சார்பில், காலேஜ் ரோட்டில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் சங்க தலைவர் முருகன் கொடியேற்றினார். செயலாளர் முத்துசாமி முன்னிலை வகித்தனர். மாவட்ட நிர்வாகிகள் கலைச் செல்வன், ரகுபதி ராஜேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

