/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை அறிவிப்பு
/
கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை அறிவிப்பு
கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை அறிவிப்பு
கால்நடைகளுக்கு அம்மை நோய் தடுப்பூசி முகாம் கால்நடைத்துறை அறிவிப்பு
ADDED : ஆக 06, 2024 06:28 AM

உடுமலை: மடத்துக்குளம் அருகே ஜோத்தம்பட்டியில், கால்நடைகளுக்கு, தோல் கழலை நோய் (அம்மை நோய்) தடுப்பூசி முகாம், கால்நடைத்துறை சார்பில், நேற்று நடந்தது. இம்மாதம், 31ம் தேதி வரை, இம்முகாம்கள் கிராமங்களில் நடத்தப்பட உள்ளது.
உடுமலை, மடத்துக்குளம் பகுதியில், பால் உற்பத்திக்காக, அதிகளவு மாடுகள் வளர்க்கப்படுகிறது; பிரதானமாக உள்ள இத்தொழிலில், கால்நடைகளுக்கு ஏற்படும் நோய்த்தாக்குதலை தவிர்க்க, கால்நடைத்துறை சார்பில், சிறப்பு தடுப்பூசி முகாம்கள் நடத்தப்படுகிறது.
இந்தாண்டு, தோல் கழலை நோய் (அம்மை நோய்) ஏற்படாமல் இருக்க, கால்நடைத்துறை சார்பில், சிறப்பு முகாம்கள் நடக்கிறது. கால்நடைத்துறை உடுமலை கோட்டத்தில், 57 ஆயிரம் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதற்கேற்ப செயல்திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, முகாம் நடத்துகின்றனர். அவ்வகையில், நேற்று, மடத்துக்குளம் தாலுகா கணியூர் கால்நடை மருந்தகத்துக்குட்பட்ட ஜோத்தம்பட்டியில், தடுப்பூசி முகாம் நடந்தது.
கால்நடை உதவி மருத்துவர் கிருத்திகா தலைமையிலான குழுவினரால், 200க்கும் மேற்பட்ட கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் ஜெயராம், முகாமை ஆய்வு செய்தார்.
வரும், 31ம் தேதி வரை, தடுப்பூசி முகாம் கிராமங்களில் நடைபெற உள்ளது. முகாம் நடத்தப்படும் இடம் மற்றும் தேதியானது, கால்நடை மருந்தகம் மற்றும் ஊராட்சி நிர்வாகத்தினர் வாயிலாக, கால்நடை வளர்ப்போருக்கு தெரியப்படுத்தப்படும்.
எனவே தடுப்பூசி குழுவினர் தங்கள் பகுதிக்கு வரும் போது, அனைத்து கால்நடைகளுக்கும், தடுப்பூசி போட்டுக்கொள்ள, கால்நடை வளர்ப்போர் முன்வர வேண்டும் என, கால்நடைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.