ADDED : மார் 07, 2025 11:07 PM
திருப்பூர்; உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, திருப்பூர் - பி.என்., ரோடு, போயம்பாளையம் பிரிவில் உள்ள ஸ்ரீ சரண் மெடிக்கல் சென்டரில், பெண்களுக்கான இலவச சிறப்பு மருத்துவ ஆலோசனை மற்றும் அறுவை சிகிச்சை முகாம் இன்றும், நாளையும் நடைபெறுகிறது. மகப்பேறு மற்றும் மகளிர் நலன், காது மூக்கு தொண்டை, பொது அறுவை சிகிச்சை, சர்க்கரை சிறப்பு மருத்துவர்கள் பங்கேற்று பரிசோதனை செய்கின்றனர்.
இன்றும், நாளையும் காலை, 9:00 முதல் மதியம், 2:00 மணி வரை நடைபெறும் முகாமில், சிறப்பு மருத்துவரின் ஆலோசனை, எலும்பு தாது அடர்த்தி பரிசோதனை, நுரையீரல் செயல்பாட்டு பரிசோதனை, பாத உணர்திறன் பரிசோதனை, செவித்திறன், உணவு கட்டுப்பாடு பரிசோதனைகள் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது.
ரத்தம், சிறுநீர், யு.எஸ்.ஜி., ஸ்கேன், சி.டி., ஸ்கேன், முழு உடல் பரிசோதனை; கர்ப்பப்பை, சினைப்பை அறுவை சிகிச்சைகள், பொது மற்றும் லேப்ராஸ்கோபிக், குழந்தையின்மை, காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சைகள் 50 சதவீத சலுகை கட்டணத்தில் மேற்கொள்ளப்படுகிறது. பங்கேற்பதற்கான முன்பதிவுக்கு, 73394 - 59993, 80564 - 04040 என்கிற எண்களில் தொடர்புகொள்ளலாம் என, மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.