/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வெப்ப நிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
/
வெப்ப நிலை அதிகரிக்கும் வானிலை மையம் தகவல்
ADDED : மார் 22, 2024 11:20 PM
திருப்பூர்;'திருப்பூரில், பகல் மற்றும் இரவு நேர வெப்ப நிலை, ஒரு சதவீதம் அதிகரிக்கும்' என, வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம், இந்திய வானிலைத்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள, திருப்பூர் மாவட்டத்தின் வாரந்திர காலநிலைநில வரம்:
பகல் நேர வெப்பநிலை, 36 டிகிரி செல்சியஸ் முதல், 37 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை, 25 முதல், 26 டிகிரி செல்சியசாக இருக்கும். காலை நேர காற்றின் ஈரப்பதம், 78 சதவீதம்; மாலை நேர காற்றின் ஈரப்பதம், 44 சதவீதமாக இருக்கும். மணிக்கு, 10 கி.மீ., வேகத்தில் காற்று வீசக் கூடும்.
காற்று, பெரும்பாலும் கிழக்கு திசையில் இருந்து வீசக்கூடும். பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை, சராசரியை விட, ஒரு சதவீதம் உயர வாய்ப்புண்டு.

