/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காங்கேயத்தில் நாய் கடித்து 826 கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு அமைச்சர் கடிதம்
/
காங்கேயத்தில் நாய் கடித்து 826 கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு அமைச்சர் கடிதம்
காங்கேயத்தில் நாய் கடித்து 826 கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு அமைச்சர் கடிதம்
காங்கேயத்தில் நாய் கடித்து 826 கால்நடைகள் உயிரிழப்பு இழப்பீடு கேட்டு அமைச்சர் கடிதம்
ADDED : பிப் 22, 2025 01:52 AM
திருப்பூர்:'காங்கேயம் தொகுதியில், தெருநாய்கள் கடித்து இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வழங்க ஆவன செய்ய வேண்டும்' என, அமைச்சர் சாமிநாதன் தலைமை செயலருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழக செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், தலைமை செயலருக்கு எழுதியுள்ள கடிதம்:
திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்ட எல்லைக்குள் உள்ள காங்கேயம் தொகுதியில் விவசாயிகளால் வளர்க்கப்படும் ஆடு, கோழி உள்ளிட்ட கால்நடைகள் தெரு நாய்களால் தாக்கப்பட்டு, இறக்கும் சம்பவம் தொடர்கிறது. உடனடியாக இழப்பீடு வழங்க வலியுறுத்தி, விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
காங்கேயம் தொகுதியில் தெரு நாய்களால் கடிபட்டு, 474 செம்மறியாடுகள், 65 வெள்ளாடுகள், 286 கோழிகள் மற்றும் ஒரு கன்றுக்குட்டி என, 826 கால்நடைகள் இதுவரை இறந்துள்ளன. கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், பேரிடர் மேலாண்மை திட்டத்தின் கீழ், இழப்பீடு வழங்குவது தொடர்பாக ஆவண செய்ய வேண்டும்.
திருப்பூர் கலெக்டர் வாயிலாக கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் துறைக்கு பரிந்துரை கடிதம் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, அவர் கூறிஉள்ளார்.
'இறக்கும் கால்நடைகளுக்கு இழப்பீடு வேண்டும்; தெருநாய்களை கட்டுப்படுத்த கொள்கை முடிவெடுக்க வேண்டும்' என, காங்கேயம் பகுதி விவசாயிகளும், கால்நடை வளர்ப்போரும், ஒன்றரை ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றனர்.
தொகுதி எம்.எல்.ஏ., என்ற முறையில் நடவடிக்கை எடுக்காமல் அமைதி காத்து வருவதாக, சாமிநாதன் மீது விவசாயிகள் குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், தற்போது தலைமை செயலருக்கு கடிதம் எழுதி, அமைச்சர் மவுனம் கலைந்துள்ளார்.