நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; மனித நேய ஜனநாயக கட்சியின் 10 வது ஆண்டு விழா முன்னிட்டு திருப்பூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
திருப்பூர் யூனியன் மில் ரோட்டில் நடந்த பொதுக்கூட்டத்தில் மாநில துணை செயலாளர் ஜாகீர் உசேன் வரவேற்றார். மாவட்ட செயலாளர் ராயல் ராஜா தலைமை வகித்தார். பல்வேறு மாவட்ட மற்றும் மாநில நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர்.
கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார். தெற்கு எம்.எல்.ஏ., செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழக அரசு ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த வேண்டும். பனியன் தொழிலின் முக்கியமான நுால் விலையைக் கட்டுப்படுத்த வேண்டும்; திருப்பூர் மாநகராட்சியில் சொத்து வரி உள்ளிட்ட வரியினங்கள் குறைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

