/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு
/
மொபைல் போன் டவர் பொதுமக்கள் எதிர்ப்பு
ADDED : ஆக 09, 2024 02:37 AM

அவிநாசி;அவிநாசி ஒன்றியம், பழங்கரை ஊராட்சி, ஆயிக்கவுண்டம்பாளையம் பகுதி செந்துார் கார்டன் உள்ளது. இதன் அருகிலேயே, மொபைல் போன் டவர் அமைக்க அதன் உரிமையாளர் அமைக்க ஒப்புதல் அளித்து பணிகள் துவங்கியுள்ளது.
குடியிருப்பு பகுதிக்குள் டவர் அமைந்தால் குழந்தைகள், முதியவர்கள் உடல்நலம் பாதிக்கப்படும். மேலும், அதிகளவில் கதிரியக்க தாக்குதலால் பல்வேறு வகையில் உடல் உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். தொடர்ந்து, டவர் அமைக்க நடைபெற்று வரும் பணிகளை தடை செய்ய வேண்டும் என கோரி அவிநாசி போலீசாரிடம் புகார் அளித்தனர்.
---
மொபைல் போன் டவர் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அவிநாசி போலீசில் மனு கொடுக்க திரண்ட பொதுமக்கள்.