/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'விசைத்தறிகள் நவீனமயம்; பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு'
/
'விசைத்தறிகள் நவீனமயம்; பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு'
'விசைத்தறிகள் நவீனமயம்; பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு'
'விசைத்தறிகள் நவீனமயம்; பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு'
ADDED : பிப் 26, 2025 11:47 PM

பல்லடம்: சென்னையில், கைத்தறி மற்றும் துணிநுால் துறை அமைச்சர் காந்தி, அரசு செயலர் அமுதவல்லி, இயக்குனர் மகேஸ்வரி ஆகியோரை, தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ், செயலாளர் வேலுசாமி, கோவை மண்டல பொறுப்பாளர் பாலசுப்பிரமணியம் ஆகியோர்நேற்று முன்தினம் சந்தித்தனர்.
சொத்து வரி உயர்வில் இருந்து, '3ஏ2' மானிய மின் கட்டணத்தில் இயங்கும் விசைத்தறி கூடங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும். கடந்த டிச., மாதம் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையில் உள்ள, 'வீடுகளில்' என்பதை நீக்கி, '3ஏ2 கட்டணத்தின் கீழ் இயங்கும் விசைத்தறி கூடங்களுக்கு' என மாற்றி அமைக்க வேண்டும். விசைத்தறிகளை நவீனப்படுத்த உதவ வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறுகையில், 'பட்ஜெட் கூட்டத்தொடரில், விசைத்தறிகளை நவீனமயமாக்க நிதி ஒதுக்கப்படும்; அடுத்த ஆண்டு, இலவச வேட்டி சேலை உற்பத்தி திட்டம் முன்கூட்டியே துவங்கப்படும் என்று அமைச்சர் உறுதியளித்தார். இது நம்பிக்கையை அளிக்கிறது.
இதேபோல், விசைத்தறிக்கூடங்களுக்கு விதிக்கப்பட்ட சொத்து வரியில் இருந்து விலக்கு அளிப்பது குறித்தும் பரிசீலிப்பதாக கூறினார்' என்றனர்.

