/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மானியங்களை நேரடியாக சேர்த்தவர் மோடி! வானதி சீனிவாசன் பேச்சு
/
மானியங்களை நேரடியாக சேர்த்தவர் மோடி! வானதி சீனிவாசன் பேச்சு
மானியங்களை நேரடியாக சேர்த்தவர் மோடி! வானதி சீனிவாசன் பேச்சு
மானியங்களை நேரடியாக சேர்த்தவர் மோடி! வானதி சீனிவாசன் பேச்சு
ADDED : ஏப் 12, 2024 01:37 AM

உடுமலை:''அரசின் மானியத்திட்டங்கள் இடைத்தரகர்கள் இல்லாமல், நேரடியாக மக்களுக்கே கிடைக்க செய்தவர் பிரதமர் மோடி,'' என வாளவாடியில் நடந்த கலந்தாய்வு கூட்டத்தில் எம்.எல்.ஏ., வானதி பேசினார்.
உடுமலை வாளவாடியில், பொள்ளாச்சி லோக்சபா தொகுதி பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜனை ஆதரித்து, கிராமப்புற பெண்களுடன் கலந்தாய்வு கூட்டத்தில், எம்.எல்.ஏ., வானதி சீனிவாசன் பேசினார்.
கூட்டத்தில், வானதி சீனிவாசன் பேசியதாவது:
தற்போது, நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடக்கிறது. பிரதமர் மோடி, இலவச 'காஸ்' இணைப்பு, கழிப்பிட மானியம், குடிநீருக்காக 'ஜல் ஜீவன்' திட்டம் என பெண்களின் வளர்ச்சிக்கும், அவர்களது அடிப்படை தேவைகளுக்குமான திட்டங்களை ஏராளமாக செயல்படுத்தியுள்ளார்.
மானியத்திட்டங்களுக்காக மக்களை வரிசையில் நிற்க வைத்து, கட்சி பிரதிநிதிகளுக்காக காக்க வைத்து, மக்களை அவமதிப்பது திராவிட கட்சிகளின் வழக்கம்.
ஆனால், மோடி அரசின் மானியத்திட்டங்கள் அனைத்துமே, நேரடியாக பயனாளிகளின் வங்கி கணக்கிற்கு செலுத்தப்படுகிறது. இதனால், இடைத்தரகர்கள் இல்லாமல், யாரையும் சார்ந்து இருக்காமல், பயனாளிகள் தங்களுக்கான மானியத்திட்டங்களை பெற்று வருகின்றனர். எனவே, மீண்டும் மோடியை தேர்வு செய்யும் வகையில், பா.ஜ., வுக்கு அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
வேட்பாளர் வசந்தராஜன் பேசியதாவது:
கடந்த 5 ஆண்டுகளாக கிராமங்களை, தி.மு.க., எம்.பி., எட்டியே பார்க்கவில்லை. பல்வேறு பிரச்னைகளில் மக்கள் சிக்கித்தவித்த போதும், கண்டுகொள்ளவில்லை. பா.ஜ., வெற்றி பெற்றதும், தாலுகா வாரியாக மக்கள் குறைகளை கேட்கவும், சேவைக்காகவும், தனியாக அலுவலகம் திறக்கப்படும். குடிநீர் மற்றும் பாசன நீர் பற்றாக்குறையில், உடுமலை பகுதி தவித்து வரும் நிலையில், தங்களது சுயலாபத்துக்காக, இங்குள்ள நீராதாரத்தை வேறு இடத்துக்கு கொண்டு செல்ல முயற்சிக்கின்றனர்.
எனவே மக்கள் விழிப்புணர்வுடன் இருந்து, இந்த தேர்தலில், ஓட்டளிக்க வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார்.
வாளவாடி சுற்றுப்பகுதியை சேர்ந்த கிராம மக்கள் திரளாக பங்கேற்றனர். தொடர்ந்து, உடுமலை ஒன்றிய கிராமங்களில், பா.ஜ., வேட்பாளர் வசந்தராஜன் பிரசாரம் செய்தார்.

