/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு தீவிரம்
/
கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு தீவிரம்
ADDED : மார் 28, 2024 11:15 PM

உடுமலை:உடுமலையில், தேர்தல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, விளம்பரங்கள் கண்காணிப்பு பணி தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி லோக்சபா தொகுதிக்கு உட்பட்ட உடுமலை சட்டசபை தொகுதியில், தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், விளம்பரங்களை கண்காணிக்கவும், பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு, வீடியோ கண்காணிப்பு குழு நியமிக்கப்பட்டுள்ளது.
அதே போல், தாலுகா அலுவலக வளாகத்தில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு, அரசியல் கட்சிகளின் விளம்பரங்கள் கண்காணிக்கப்படுவதோடு, வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சியினரின் செலவினங்களும் கண்காணிக்கப்படுகிறது.
மேலும், தேர்தல் விதிமீறல் குறித்து கட்டுப்பாட்டு அறைக்கு மக்கள் தெரிவிக்கும் புகார்கள், உடனுக்குடன் பறக்கும்படை, நிலை கண்காணிப்புக்குழுவினருக்கு பகிரப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.

