ADDED : ஜூன் 13, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்: திருப்பூர் நகரப்பகுதி, மங்கலம் சுற்றுப்பகுதிகளில், கடந்த சில நாட்களாக, காலை நேரத்தில் திடீர் மின்வெட்டு ஏற்படுகிறது. பத்து நிமிடம் முதல், ஒரு மணி நேரம் வரை மின்தடை ஏற்படுவதால், பள்ளிக்கு புறப்பட முடியாமல், மாணவ, மாணவியர் அவதிப்படுகின்றனர்.
காற்று பலமாக வீசிக்கொண்டிருப்பதால், மின்கம்பியில் மரக்கிளைகள் உரசி, மின்தடை ஏற்பட்டிருக்கலாம் என, மின்வாரிய அலுவலர்கள் பதில் கூறுகின்றனர். இருப்பினும், இனி காற்று காலம் என்பதால், மரக்கிளைகளை அகற்றி, மின்தடை ஏற்படுவதை தடுக்க வேண்டும்.
'பீக் ஹவர்' நேரங்களில், அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்படுவதை தடுக்க, மின்வாரிய அலுவலர்கள் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமென, மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.