நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், சர்வதேச தாய்மொழி தின விழா கொண்டாடப்பட்டது.
சர்வதேச தாய்மொழி தின நேற்று மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவ்வகையில்,
உடுமலை அரசு கலைக்கல்லுாரியில் சர்வதேச தாய்மொழி தின விழா நடந்தது. கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் சிவசக்தி வரவேற்றார். கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.
தாய்மொழியின் சிறப்பும், இலக்கண இலக்கிய தன்மைகள் குறித்து கல்லுாரி முதல்வர் பேசினார்.
இக்கல்லுாரி முன்னாள் தமிழ்த்துறை தலைவர் மதியழகன், தமிழ்மொழியின் சிறப்பு குறித்து பேசினார்.
விழாவில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவ, மாணவியர், அலுவலர்கள் பங்கேற்றனர். இணை பேராசிரியர் அபுபக்கர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மாணவி சத்யா நன்றி தெரிவித்தார்.