ADDED : பிப் 22, 2025 07:02 AM

அவிநாசி; அவிநாசி தமிழர் பண்பாடு கலாசாரப் பேரவை அறக்கட்டளை சார்பில், உலகத் தாய்மொழி நாள் விழாவையொட்டி அவிநாசி பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள பயணியர் விடுதியில் இருந்து அலங்கரிக்கப்பட்ட தமிழ்த்தாயின் படத்துடன் அறக்கட்டளை நிர்வாகிகள் உள்ளிட்டோர் ஊர்வலத்தை துவக்கினர். மெயின் ரோடு, மேற்குரத வீதி வழியாக சேவூர் ரோட்டில் உள்ள வ.உ.சி., செங்காடு திடல் வரை ஊர்வலம் நடந்தது. அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில், அறக்கட்டளை தலைவர் நடராஜன் தலைமை வகித்தார்.
துணைத் தலைவர் அப்புசாமி முன்னிலை வகித்தார். ஓய்வு பெற்ற தமிழ்த் துறை தலைவர் ராமலிங்கம், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற தெக்கலுார் பழனிசாமி, பணி நிறைவு ஆசிரியர் கூட்டமைப்பு மாநில தலைவர் சுப்பிரமணியன், பொது செயலாளர் வெங்கடாசலம் உட்பட பலர் சிறப்புரையாற்றினர். அருணாசலம் நன்றி கூறினார்.
ஊர்வலத்தில் பங்கேற்றோர் பெண் வன்கொடுமைக்கு எதிராகவும், மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என்று கோஷம் எழுப்பினர்.

