/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
5 மாதமாக உதவித்தொகை நிறுத்தம் மாற்றுத்திறனாளியின் தாய் கண்ணீர்
/
5 மாதமாக உதவித்தொகை நிறுத்தம் மாற்றுத்திறனாளியின் தாய் கண்ணீர்
5 மாதமாக உதவித்தொகை நிறுத்தம் மாற்றுத்திறனாளியின் தாய் கண்ணீர்
5 மாதமாக உதவித்தொகை நிறுத்தம் மாற்றுத்திறனாளியின் தாய் கண்ணீர்
ADDED : மார் 11, 2025 05:18 AM

திருப்பூர்,: திருப்பூர், புது பஸ் ஸ்டாண்ட் அருகே, குமாரசாமி நகரை சேர்ந்த செல்வி - முனுசாமியின் மூத்தமகன், காளீஸ்வரன், 19. மன வளர்ச்சி குன்றிய காளீஸ்வரனுக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மாதந்தோறும் 2 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஐந்து மாதங்களாக இந்த உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து மனு அளிக்க, செல்வி, தனது மகனை கலெக்டர் அலுவலகத்துக்கு ஆட்டோவில் அழைத்துவந்தார். குறைகேட்பு கூட்ட அரங்கிற்கு செல்ல, போர்டிகோ வரை வந்து நீண்ட நேரம் காத்திருந்தனர். அதன்பின்னரே மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தினர், சக்கர நாற்காலி கொடுத்தனர்.
செல்வி கூறுகையில், ''எனது மகனின் மருத்துவ செலவுக்காக பெருந்தொகை செலவிட வேண்டியுள்ள நிலையில், கடந்த ஐந்து மாதங்களாக உதவித்தொகை நிறுத்தப்பட்டது எங்களுக்கு பெரும் சுமையை ஏற்படுத்துகிறது. மாதாந்திர உதவித்தொகையை உடனடியாக வழங்க வேண்டும்,'' என்றார்.
மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் வசந்த ராம்குமார் கூறுகையில், ''காளீஸ்வரனின் ஆதார் ஆவணங்களின் முரண்பாடு காரணமாக உதவித்தொகை நிறுத்தப்பட்டுள்ளது தெரிய வருகிறது. அவரின் ஆதார் விவரங்களை சென்னைக்கு அனுப்பி வைத்துள்ளோம். ஐந்து மாதங்களையும் சேர்த்து விரைவில் உதவித்தொகை வழங்கப்படும்,'' என்றார்.