/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சாலை அமைக்க அடிக்கல்; எம்.பி., ராஜா பங்கேற்பு
/
சாலை அமைக்க அடிக்கல்; எம்.பி., ராஜா பங்கேற்பு
ADDED : மார் 07, 2025 03:26 AM
அவிநாசி; அவிநாசி தாலுகா, செம்பியநல்லுார் ஊராட்சியில் அவிநாசி - மேட்டுப்பாளையம் சாலை நாதம்பாளையம், வெள்ளியம்பாளையம் வரை வழியாக, 70 லட்சம் ரூபாய் மதிப்பில் நபார்டு திட்டத்தில், 1.95 கி.மீ., சாலை அமைக்க அடிக்கல் நாட்டு விழா, நீலகிரி எம்.பி., ராஜா தலைமையில் நடந்தது.
சேவூர் ஊராட்சி குன்னத்துார் சாலை முதல் முதலிபாளையம் ஆதி திராவிடர் காலனி வரை, 1.34 கோடி ரூபாய் மதிப்பில், நபார்டு திட்டத்தில் 1.99 கிமீ துாரம் சாலை அமைக்கும் பணி, பொங்கலுார் ஊராட்சி, பசூர், தண்டுக்காரன்பாளையம் சாலை முதல் திம்மையநாய்க்கன் புதுார் வரை, 97 லட்சம் ரூபாய் மதிப்பில் நபார்டு திட்டத்தில், 2 கி.மீ., துாரம் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது.
நிகழ்ச்சியில், தி.மு.க., தலைமை செயற்குழு உறுப்பினர் சரவணன் நம்பி, ஒன்றிய செயலாளர்கள் பால்ராஜ், சிவப்பிரகாஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.