ADDED : ஆக 15, 2024 11:43 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை : உடுமலை தமிழிசை சங்கம் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இசைப்போட்டி, ஆக., 18ல் நடக்கிறது.
உடுமலை தமிழிசை சங்கத்தின் சார்பில், பள்ளி மாணவர்களுக்கான இசைப்போட்டி மூன்று பிரிவுகளில் நடக்கிறது. போட்டிகள் உடுமலை ஆர்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில், ஆக., 18ம் தேதி காலை, 10:00 மணி முதல் நடக்கிறது.
போட்டிகள் மூன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை, ஒன்பது முதல் பிளஸ் 2 வகுப்பு வரை என, மூன்று பிரிவுகளில் நடக்கிறது.
போட்டியில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள், 99424 67764என்ற எண்ணில் தொடர்பு கொண்டு, போட்டிக்கான பதிவு செய்வதை அறியலாம்.