/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
குறைகள் தெரிவிக்க 'நம்ம திருப்பூர்' செயலி
/
குறைகள் தெரிவிக்க 'நம்ம திருப்பூர்' செயலி
ADDED : ஜூன் 26, 2024 10:43 PM

திருப்பூர் : திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள குறைகளை பொதுமக்கள் தெரிவிக்க வசதியாக 'மொபைல்' செயலி நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
மாநகராட்சி குறித்த தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்வதுடன், தங்கள் புகார்களை தெரிவிக்க வசதியாக, மொபைல் செயலி அறிமுக நிகழ்ச்சி, மாநகராட்சி அலுவலகத்தில் நேற்று நடந்தது. மேயர் தினேஷ்குமார் தலைமை வகித்தார்.
மாநகராட்சி கமிஷனர் பவன்குமார் முன்னிலை வகித்தார். 'நம்ம திருப்பூர்' எனும் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, அதன் செயல்பாடுகள் குறித்து விளக்கப்பட்டது.
மாநகராட்சியின் நான்கு மண்டலங்களில் நடந்து வரும் வளர்ச்சி பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர் ஆய்வுக்கூட்டம் நடந்தது.