/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய சிலம்பாட்டம்; மாணவர்கள் அசத்தல்
/
தேசிய சிலம்பாட்டம்; மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 22, 2024 12:33 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : தேசிய சிலம்பாட்ட போட்டியில், திருப்பூரை சேர்ந்த மாணவ, மாணவியர் அபார வெற்றி பெற்றனர்.
பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பாட்ட போட்டிகளில், திருப்பூரை சேர்ந்த மாஸ்டர் கொடியரசன் தலைமையிலான ஜிகினா சிலம்பம் அகாடமி மற்றும் பாரத் மெட்ரிக் பள்ளி சார்பாக, 18 மாணவ, மாணவியர் பங்கேற்றனர். இவர்கள் அனைவரும், முதலிடம் பிடித்து வெற்றி பெற்று திருப்பூர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்தனர். வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு கோப்பை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டன.