/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் ஊர்வலம்
/
தேசியக்கொடி ஏந்தி பா.ஜ.,வினர் ஊர்வலம்
ADDED : ஆக 16, 2024 12:10 AM

திருப்பூர் : திருப்பூரில் பா.ஜ.,வினர் நடத்திய தேசியக்கொடி டூவீலர் ஊர்வலத்தில் ஏராளமானோர் திரண்டனர்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், தேசிய கொடி ஏந்திய டூவீலர் ஊர்வலம் நேற்று மாலை காந்தி நகரில் துவங்கியது.
மாநில பொது செயலாளர் முருகானந்தம் பங்கேற்று துவக்கி வைத்தார். வடக்கு மாவட்ட தலைவர் செந்தில்வேல், மாநில செயலாளர் மலர்க்கொடி உள்ளிட்ட ஏராளமான பா.ஜ., வினர் திரண்டனர். காந்திநகரில் துவங்கிய ஊர்வலம், திருப்பூர் குமரன் சிலை முன்பு நிறைவு பெற்றது. ஊர்வலத்தில் பங்கேற்ற பா.ஜ., வினர், தேசிய கொடிகளை ஏந்தியபடி வலம் வந்தனர்.
ஊர்வலத்தில் சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகள் குறித்து கட்சியினர் பேசினர்.

