/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; அரசு கல்லுாரி மாணவர் பங்கேற்பு
/
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; அரசு கல்லுாரி மாணவர் பங்கேற்பு
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; அரசு கல்லுாரி மாணவர் பங்கேற்பு
தேசிய ஒருமைப்பாட்டு முகாம்; அரசு கல்லுாரி மாணவர் பங்கேற்பு
ADDED : பிப் 15, 2025 07:17 AM

திருப்பூர்; மாநில பயிலரங்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பயிற்சி முகாமுக்கு செல்லும் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி மாணவர்களுக்கு, கல்லுாரி நிர்வாகம் தரப்பில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
துாத்துக்குடியிலுள்ள காமராஜர் கல்லுாரியில், நேற்று (14ம் தேதி) துவங்கி, 16ம் தேதி வரை, பேரிடர் மேலாண்மை மற்றும் முதலுதவி பயிலரங்கம் நடக்கிறது. கோவை பாரதியார் பல்கலை கல்லுாரிகளில் இருந்து, எட்டு மாணவ, மாணவியர் தேர்வாகினர்.
கோவை பாரதியார் பல்கலை குழுவை, என்.எஸ்.எஸ்., ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் வழிநடத்துகிறார். இதில் பங்கேற்க, திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி வேதியியல் துறை மாணவர் லட்சுமிகாந்த் தேர்வாகியுள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலம், சிவாஜி பல்கலையில் வரும், 16 முதல், 22 வரை ஏழு நாட்கள் தேசிய ஒருமைப்பாடு பயிற்சி முகாம் நடக்கிறது. நாடு முழுதும், 12 மாநிலங்களை சேர்ந்த, 200 மாணவ, மாணவியர் பங்கேற்கின்றனர்.
இதில் பங்கேற்க, கோவை, பாரதியார் பல்கலையில் இருந்து, 10 பேர் தேர்வாகியுள்ளனர். சிக்கண்ணா அரசு கல்லுாரி வணிகவியல் துறை மாணவர் கோகுல்ராம் மேற்கண்ட பயிற்சி முகாமில் பங்கேற்க தேர்வாகியுள்ளார்.
மாநில பயிலரங்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு பயிற்சி முகாமுக்கு செல்லும் மாணவர்கள் லட்சுமிகாந்த் மற்றும் கோகுல்ராம் இருவரையும், கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன், பேராசிரியர்கள், நேற்று பாராட்டி, வழியனுப்பி வைத்தனர்.