/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய பந்தயம்; சீறிப்பாய்ந்த கார்கள்
/
தேசிய பந்தயம்; சீறிப்பாய்ந்த கார்கள்
ADDED : ஆக 02, 2024 05:31 AM

பல்லடம்,: பல்லடம் அருகே நடந்த தேசிய அளவிலான சாம்பியன்ஷிப் கார் பந்தயம் நடந்தது. பல்வேறு மாநிலங்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், தேசிய அளவிலான மூன்றாவது சுற்று சாம்பியன்ஷிப் கார் பந்தயம், பல்லடம் அருகே கேத்தனுாரில் நடந்தது. தமிழகம், கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து, 200க்கும் மேற்பட்ட வீரர்கள் - வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்களுக்கான பிரிவில், ஆதித்ய தாகூர்- வீரேந்தர் கஷ்யப்,
ஜீத் ஜபக் -சேகர், அபின் ராய் -மொய்தீன் ஜஷீர் ஆகிய ஜோடிகள் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர். பெண்கள் பிரிவில் ஹர்ஷிதா ராஜ் கவுடா -பிரமோத்ராமன் ஆகியோர் வெற்றி பெற்றனர். மற்றொரு பிரிவில், அனீஸ்நாத்- அனீஸ் அமிதா, பல்ஜிந்தர் சிங் தில்லான் - கவுதம் ஆகியோர் முதல் இடத்தில் வெற்றி பெற்றனர். நான்காவது சுற்று கார் பந்தயம் அக்., 18, 20 ஆகிய தினங்களில், ஹைதராபாத்தில் நடக்க உள்ளதாக கோவை ஆட்டோ ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.