/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
தேசிய நீச்சல் போட்டி:திருப்பூர் மாணவி தேர்வு
/
தேசிய நீச்சல் போட்டி:திருப்பூர் மாணவி தேர்வு
ADDED : ஜூலை 16, 2024 11:02 PM

திருப்பூர்:மாநில அளவிலான நீச்சல் போட்டியில் திருப்பூர் மாணவி வெற்றி பெற்று, தேசிய போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறார்.தமிழ்நாடு மாநில நீர் விளையாட்டு சங்கத்தின் சார்பில், 40வது சப் ஜூனியர் மற்றும், 50வது ஜூனியர் பிரிவுக்கான, மாநில அளவிலான நீர் விளையாட்டு சாம்பியன் ஷிப் போட்டி, சென்னையில் நடந்தது.இதில், திருப்பூர் குமார் நகர் அரசு மேல்நிலைப்பள்ளியில் படிக்கும் மாணவி அர்ச்சனா, குரூப் - 1 பிரிவில், 50 மீ., பேக் ஸ்ட்ரோக் பிரிவில், வெள்ளி பதக்கம் வென்றார்.
200 மீட்டர் பேக் ஸ்ட்ரோக் பிரிவில், வெண்கலம் வென்றார். இதன் வாயிலாக, ஒடிசா மாநிலம், புவனேஸ்வரில் நடக்கவுள்ள தேசிய போட்டியில், தமிழக அணியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளார்.தேசிய நீச்சல் போட்டிக்கு தேர்வான அர்ச்சனாவை, பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பெற்றோர், மாணவ, மாணவியர் பாராட்டினர்.