/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அரசு பள்ளி மாணவருக்கு 'நீட்' மாதிரி தேர்வு
/
அரசு பள்ளி மாணவருக்கு 'நீட்' மாதிரி தேர்வு
ADDED : ஏப் 28, 2024 12:35 AM

திருப்பூர்:திருப்பூர் மாவட்டத்தில் மருத்துவ படிப்புக்கான நுழைவுத்தேர்வு (நீட்) எழுத, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 585 பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கு கடந்த மார்ச், 25ம் தேதி முதல் பள்ளி கல்வித்துறை சார்பில் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
திருப்பூரில், ஜெய்வாபாய் - கே.எஸ்.சி.; தாராபுரம், என்.சி.பி.,; உடுமலை ஆர்.கே.ஆர்.,; பல்லடம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் பயிற்சி வழங்கப்படுகிறது.
தாவரவியல், விலங்கியல், வேதியியல், இயற்பியல் ஆகிய பாடப்பிரிவுகளுக்கு அனுபவம் வாய்ந்த முதுகலை ஆசிரியர்கள் சிறப்பு வகுப்பு நடத்தி வருகின்றனர். இந்நிலையில், பயிற்சி பெறும் மாணவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு நேற்று நடந்தது. பள்ளிகல்வித்துறை மாதிரி வினாத்தாள் அனுப்பிய நிலையில், காலை, 9:30க்கு துவங்கிய தேர்வு மதியம், 12:30 மணி வரை நடந்தது.
'நீட்' தேர்வில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர். விடைத்தாள், ஒரு கேள்விக்கு, 4 மதிப்பெண் என மொத்தம் 720 மதிப்பெண்ணுக்கு, 180 கேள்விகள் அடங்கிய வினாத்தாள் வழங்கப்பட்டது. மாவட்டத்தில், ஐந்து மையங்களில், 221 மாணவ, மாணவியர் 'நீட்' மாதிரி தேர்வு எழுதினர்.

