/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
புது மார்க்கெட் வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்
/
புது மார்க்கெட் வீதி ஆக்கிரமிப்பு அகற்றம்
ADDED : ஆக 09, 2024 02:09 AM
திருப்பூர்;புது மார்க்கெட் வீதிபகுதியில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடந்தது.
திருப்பூர் மாநகராட்சி பகுதியில் உள்ள பிரதான ரோடுகளில் ஆக்கிரமிப்புகள் அதிகரித்து வருகின்றன. வாகன ஓட்டிகள், பாதசாரிகள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.
பல்வேறு ரோடுகளில் போக்குவரத்து நெருக்கடியும் ஏற்படுவது சகஜமாக உள்ளது. இதற்கு தீர்வு காணும் வகையில், மாநகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறை, வருவாய்த்துறை, போலீசார் என அவ்வப்போது இதுபோன்ற ஆக்கிரமிப்புகள் அகற்றப்படுகிறது.
நேற்று மத்திய பஸ் ஸ்டாண்ட் சுற்றுப்பகுதியில் புது மார்க்கெட் வீதி உள்ளிட்ட வீதிகளில் ரோட்டோர ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.
மாநகராட்சி ஊழியர்கள், ரோட்டில் கடைகள் முன்புறத்தில் வடிகால் மீதும், அவற்றைக் கடந்தும் அமைத்திருந்த பேனர்கள், போர்டுகள் உள்ளிட்டவற்றையும், பந்தல், ெஷட் உள்ளிட்ட ஆக்கிரமிப்பு களையும் அகற்றினர்.