/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சீரான மின் வினியோகம் புதிய மின் மாற்றி அமைப்பு
/
சீரான மின் வினியோகம் புதிய மின் மாற்றி அமைப்பு
ADDED : ஜூலை 20, 2024 11:12 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி:தடையற்ற மின் வினியோகத்திற்காக, அவிநாசி மேற்கு பிரிவு அலுவலகத்திற்கு உட்பட்ட சேவூர் ரோடு மற்றும் ரங்கா நகர் பகுதிகளில் ஆறு புதிய மின்மாற்றிகள் பொருத்தப்பட்டது.
இவற்றை, அவிநாசி கோட்ட செயற்பொறியாளர் பரஞ்சோதி நேற்று இயக்கி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில், உதவி மின் பொறியாளராக வடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். அவிநாசி மேற்கு பிரிவு அலுவலகத்திற்குட்பட்ட பகுதிகளில் 15 மின் மாற்றி கட்டமைப்புகளில் பழுதடைந்த, 30 மின் கம்பங்களும், மின் பாதைகளில் பழுதடைந்த 150 மின் கம்பங்களும் மாற்றப்பட்டு புதிய மின்கம்பங்கள் நடப்பட்டுள்ளதாக, செயற்பொறியாளர் தெரிவித்தார்.