/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
60+26 கூடுதல் வார்டுகளுடன் அடுத்த மாநகராட்சி தேர்தல் : விரிவாகும் எல்லைகள்... உயர்வாகுமா நன்மைகள்?
/
60+26 கூடுதல் வார்டுகளுடன் அடுத்த மாநகராட்சி தேர்தல் : விரிவாகும் எல்லைகள்... உயர்வாகுமா நன்மைகள்?
60+26 கூடுதல் வார்டுகளுடன் அடுத்த மாநகராட்சி தேர்தல் : விரிவாகும் எல்லைகள்... உயர்வாகுமா நன்மைகள்?
60+26 கூடுதல் வார்டுகளுடன் அடுத்த மாநகராட்சி தேர்தல் : விரிவாகும் எல்லைகள்... உயர்வாகுமா நன்மைகள்?
ADDED : ஜூன் 18, 2024 01:43 AM

திருப்பூர்;திருப்பூர் மாநகராட்சியை விரிவாக்கம் செய்யும் வகையிலான நடவடிக்கையை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டுள்ளது. ெதாகுதி சீரமைப்பு கமிஷனின் பரிந்துரைப்படி விரிவாக்கம் செய்யப்பட்டாலும் அதற்கான சாத்தியக் கூறுகள், நடைமுறைச் சிக்கல்கள் ஆகியன குறித்தும் கருத்தில் கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
தமிழக தொகுதி சீரமைப்பு கமிஷன், கடந்த 2017ல், உள்ளாட்சி அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய வார்டு எண்ணிக்கை மற்றும் எல்லை குறித்து பரிந்துரைத்துள்ளது. அதன்படி 10 முதல் 15 லட்சம் வரை மக்கள்தொகை உள்ள மாநகராட்சியான திருப்பூர் 86 வார்டுகளுடன் விரிவாக்கம் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை செயல்படுத்தும் விதமாக மாநகராட்சி நிர்வாகம், மாநகராட்சி எல்லையை ஒட்டி அமைந்துள்ள உள்ளாட்சி அமைப்புகளை இணைக்கும் வகையில் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. மக்கள் தொகை, வருவாய் உள்ளிட்ட விவரங்கள் உரிய துறைகளில் கேட்கப்பட்டுள்ளது. அவற்றைப் பெற்று இது குறித்த அறிக்கை தயாரிக்கப்படவுள்ளது.
மாநகராட்சியில் இணைக்க உத்தேசிக்கப்படும் உள்ளாட்சி அமைப்புகளில் கருத்து கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும். அவ்வகையில் மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டு அடுத்த உள்ளாட்சி தேர்தலில், விரிவுபடுத்தப்பட்ட, 86 வார்டுகளுடன் கூடிய மாநகராட்சிக்கு தேர்தல் நடத்தப்படும்.
மாநகராட்சிக்கு என்ன பயன்?
தற்போது 60 வார்டுகளுடன் உள்ள மாநகராட்சி விரிவுபடுத்தப்பட்டால், நிர்வாகத்தின் அதிகார எல்லை அதிகரிக்கும். அப்பகுதிகளின் மூலம் பெறப்படும் வருவாய் நிர்வாகத்துக்கு பெரும் உதவியாக இருக்கும்.
மக்கள் தொகை மற்றும் எல்லை பரப்புக்கு ஏற்ப, மத்திய மற்றும் மாநில அரசுகளிடமிருந்து நிதி ஆதாரங்கள் கூடுதலாகப் பெற்று பணிகள் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும். மாநகராட்சியின் தரம் உயர்த்தப்படும். வேலைவாய்ப்புகள் பெருகும்.
இணைப்பு பகுதிகளுக்கு என்ன பயன்?
நகர எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சிகள் இணைக்கப்படும் போது, மாநகராட்சி பகுதி என்ற அந்தஸ்து உயரும். நில மதிப்பு உள்ளிட்ட வரவினங்கள் அதிகரிக்கும். குடிநீர், ரோடு, வடிகால், தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மேம்படும்.
மருத்துவம், சுகாதாரம் உள்ளிட்ட தேவைகள் நிறைவேறும். ஊராட்சிகளில் ஒரு செயலர் மட்டுமே கவனிக்கும் பணிகளுக்கு கூடுதல் ஊழியர்கள், பல்வேறு பிரிவுகளுக்கு அலுவலர்கள் நியமிக்கப்படுவர். நிர்வாகப் பணிகள் எளிதாகும்.
மாநகராட்சியில் தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் 100 வார்டுகள் அமைக்கப்பட வேண்டும். நகரை ஒட்டி அமைந்துள்ள சில ஊராட்சிகள் நகர அளவுக்கு வளர்ச்சி பெற்றுள்ளன. தொழிற்சாலைகள் உள்ளிட்டவையும் அதிகளவில் உள்ளன. மாநகராட்சிக்குச் சொந்தமான இடம்; மாநகராட்சி திட்டப் பணிகளும் ஊராட்சிகளில் அமைந்துள்ளது.
எல்லை விரிவடையும் போது, நிர்வாகத்துக்கு வருவாய் இனம் பெருகும்; அப்பகுதியினருக்கு அடிப்படை வசதிகளும் மேம்படும்.தொழில் நகரை ஒட்டி அமைந்துள்ள ஊராட்சிகளில் நுாறு நாள் வேலை திட்டத்தைக் காட்டிலும் தொழிலாளர் கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர்.
மாநகராட்சியில் ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளில் இன் னும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தும் பணி முழுமை பெறாமல் உள்ளது. அவற்றை முழுமையாக செய்து முடிக்க வேண்டிய கடமை நிர்வாகத்துக்கு உள்ளது.
குடிநீர் ஆதாரம் அதிகரிக்கப்பட வேண்டும். குப்பை பிரச்னைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகள் முழுமை பெறாமல் உள்ளது. வார்டு எல்லைகள் சீரமைப்பு செய்ததில் கூட சில குழப்பங்கள் உள்ளன. இது போன்ற சில நடவடிக்கைகள் முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்.
எல்லை விரிவாக்கம் குறித்த விவரங்கள் கேட்கப்பட்டுள்ளது. நிர்வாகம் சார்பிலும் உரிய கருத்துகள், சாத்தியக் கூறுகள், அவசியம் குறைவான விஷயங்கள் குறித்து பரிசீலித்து அறிக்கை அளிக்கப்படும். உரிய பரிசீலனை மற்றும் அறிக்கை முடிவுகள், அதனடிப்படையிலான, அரசு உத்தரவுப்படியும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
- தினேஷ்குமார்,மேயர், திருப்பூர் மாநகராட்சி
மாநகராட்சியுடன் இணைக்கும் முயற்சிக்கு ஊராட்சி பகுதிகளில் கடும் எதிர்ப்பு நிலை காணப்படுகிறது. மாநகராட்சியாக மாறினால், நுாறு நாள் வேலைத்திட்டம் மற்றும் மத்திய அரசின் மானியங்கள், வளர்ச்சித் திட்டங்கள் நிறுத்தப்பட்டு விடும்.
குடிநீர் கட்டணம், சொத்து வரி, கட்டட அனுமதி போன்ற பல்வேறு விதங்களில் செலவினம் அதிகரிக்கும். இங்கு ஊராட்சி தலைவர் என்ற பதவி பறிக்கப்பட்டு, வார்டு கவுன்சிலர் அளவில் தான் அதிகாரம் இருக்கும்.
திருப்பூரைப் பொறுத்த வரை தற்போதுள்ள வார்டு பகுதிகளில் கூட பணிகள் முழுமை பெறாமல் உள்ளது. ஏற்கனவே இணைக்கப்பட்ட பகுதிகளில், அடிப்படை வசதிகள் மேம்படுத்த முடியாமல், அப்பகுதியினர் பெரும் அவதியில் உள்ளனர். வெறும் பெயரளவில் மாநகராட்சி என்று வைத்துக் கொண்டு, வரியினங்களை மட்டும் அதிகரிப்பதால் எந்த பயனும் இல்லை என்று ஊராட்சி பகுதியினர் தெரிவிக்கின்றனர்.
என்ன செய்யலாம்?
ஊராட்சி பகுதிகளில் மாநகராட்சியுடன் இணைக்கும் போது, வரியினங்கள் அதிகரிக்கும் என்ற அச்சம் முதல் கட்டமாக உள்ளது. இதை தவிர்க்கும் வகையில், இணைக்கப்படும் பகுதிகளில் வரி உயர்வினை உடனடியாக மேற்கொள்ளாமல், உரிய அடிப்படை வசதிகள் மேம்படுத்தியும், குறிப்பிட்ட காலத்துக்கு பின்னரோ மேற்கொள்ளலாம்.
அதிகார வரம்பு குறித்தும், அடிப்படை வசதிகள் மேம்படுதல்; வாரம் ஒருமுறை வரும் குடிநீர்என்பது குடிநீர் திட்டம் மூலம்தினமும் கிடைக்கும் என்பது உள்ளிட்டவை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.