/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆக., 9ல் 'நிட்ஷோ' கண்காட்சி! நவீனத்தை நோக்கி மேலும் ஒரு படி
/
ஆக., 9ல் 'நிட்ஷோ' கண்காட்சி! நவீனத்தை நோக்கி மேலும் ஒரு படி
ஆக., 9ல் 'நிட்ஷோ' கண்காட்சி! நவீனத்தை நோக்கி மேலும் ஒரு படி
ஆக., 9ல் 'நிட்ஷோ' கண்காட்சி! நவீனத்தை நோக்கி மேலும் ஒரு படி
ADDED : ஜூலை 31, 2024 12:21 AM
திருப்பூர்;புதிய தொழில்நுட்பத்தில் உருவான பின்னலாடை உற்பத்தி இயந்திரங்களுடன், 'நிட்ேஷா' கண்காட்சி, ஆக.,9ல் துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
ஜவுளி மற்றும் பின்னலாடை உற்பத்தியில், ஒவ்வொரு ஆண்டும் புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது. அவ்வகையில், புதிய மெஷின்கள் மற்றும் தொழில்நுட்பங்களை ஒரே இடத்தில் அறிமுகம் செய்யும் வகையில், ஆண்டுதோறும் 'நிட்ேஷா' கண்காட்சி நடத்தப்படுகிறது.
திருப்பூர், காங்கயம் ரோடு, ஹவுசிங் யூனிட் பிரிவில் உள்ள, 'டாப் லைட்' மைதானத்தில், கண்காட்சி நடக்கிறது. இதில், பல்வேறு நாடுகளை சேர்ந்த, 360க்கும் அதிகமான நிறுவனங்கள் ஸ்டால் அமைக்க உள்ளன. குறிப்பாக, 53 முன்னணி நிறுவனங்கள், தங்களது புதிய தொழில்நுட்பத்தை கண்காட்சியில் அறிமுகம் செய்ய உள்ளன.
கண்காட்சி வளாகத்தில், ஐந்து பெரிய அரங்குகளில், 360 ஸ்டால் அமைக்கும் பணி, இரவு, பகலாக நடந்து வருகிறது. இதுவரை திருப்பூரில், இல்லாத புதிய தொழில்நுட்பங்கள், இந்த கண்காட்சியில் அறிமுகம் செய்யப்படுகிறது.
கண்காட்சி நிர்வாக இயக்குனர் கிருஷ்ணா கூறியதாவது:
வரும் ஆக., 9ல் துவங்கி மூன்று நாள் 'நிட்ேஷா' நடக்க உள்ளது. ஜெர்மனி, போர்ச்சுக்கல், இத்தாலி, அமெரிக்கா, சீனா, தைவான் நாட்டு நிறுவனங்கள் பங்கேற்கின்றன. 'நிட்டிங்', பிரின்டிங், எம்ப்ராய்டரி, தையல் உள்ளிட்ட மெஷின்கள் இடம்பெறுகிறது. புதிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படுகிறது.
இந்தியாவில், 2,500க்கும் அதிகமான மெஷின்களை விற்பனை செய்த ஸ்பூர்த்தி நிறுவனமும் பங்கேற்கிறது. பிரின்டிங் துறையில், இந்தியாவிலேயே பெரிய கண்காட்சியாக, 'நிட்ேஷா' கண்காட்சி அமையும்.
சூயிங் மெஷின், நிட்டிங் ஒன்பது நிறுவனங்கள், சாயம் மற்றும் கெமிக்கல் நிறுவனங்கள் உட்பட, ஒட்டுமொத்த பனியன் தொழில் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் நிறுவனங்கள், கண்காட்சியில் அணிவகுக்க உள்ளன. வெளிநாடுகளில் தயாரிக்கப்படும் மெஷின்களை காட்டிலும், கூடுதல் வசதிகளுடன், பாதியளவு விலையில் கண்காட்சியில் கிடைக்கும்.
இவ்வாறு, அவர் கூறினார்.