/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரேஷனில் கூடுதல் ஒதுக்கீடு இல்லை; பொருள் பற்றாக்குறையால் தொல்லை
/
ரேஷனில் கூடுதல் ஒதுக்கீடு இல்லை; பொருள் பற்றாக்குறையால் தொல்லை
ரேஷனில் கூடுதல் ஒதுக்கீடு இல்லை; பொருள் பற்றாக்குறையால் தொல்லை
ரேஷனில் கூடுதல் ஒதுக்கீடு இல்லை; பொருள் பற்றாக்குறையால் தொல்லை
ADDED : மார் 10, 2025 12:49 AM

திருப்பூர்; திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பணியாளர் சங்க (சி.ஐ.டி.யு.,) நிர்வாகக்குழு கூட்டம், மாவட்ட அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட தலைவர் கவுதமன் தலைமை வகித்தார். செயலாளர் மகேந்திரன், பொருளாளர் சுரேஷ், மாவட்ட துணை தலைவர் கருப்புசாமி, துணை செயலாளர்கள் மற்றும் நிர்வாக குழு உறுப்பினர்கள் பேசினர்.
ரேஷன் கடைகளுக்கு அனுப்பும் பொருட்களை, முறையாக சரிபார்த்து, சரியான எடையில் அனுப்பி வைக்க வேண்டும். விற்பனையாளரிடம் பட்டியல் பெற்று, அந்தந்த மளிகை பொருட்களை மட்டும் கடைகளுக்கு ஒதுக்க வேண்டும்.
வெளிமாநில மற்றும் வெளி மாவட்ட ரேஷன் கார்டுகளுக்காக, கடைகளுக்கு, 10 சதவீதம் கூடுதல் பொருட்கள் வழங்க வேண்டும்.
வழக்கமாக, ஒவ்வொரு கடைக்கும், 88 சதவீதம் மட்டுமே பொருட்கள் ஒதுக்கப்படுகின்றன; இதனால், வெளிமாவட்ட தொழிலாளர்களுக்கு பொருள் வழங்கும் போது, பிறகு கார்டுதாரருக்கு பொருள் வழங்க முடிவதில்லை; இதனால், அடிக்கடி வாக்குவாதம் ஏற்படுகிறது; கூடுதல் ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
கூட்டுறவு சங்க பணியாளர்களுக்கு, மாதமாதம் பி.எப்., சந்தா தொகை பிடித்தம் செய்யப்படுகிறது. அத்தொகையை, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் செலுத்தப்படுகிறது. இதனால், வருங்கால வைப்பு நிதி அலுவலகத்தில் செல்வதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது; இனிமேல் பி.எப்., அலுவலகத்தில், சந்தா தொகையை நேரடியாக செலுத்த வேண்டும்.
பழுதான ரேஷன் கடைகளை பராமரிப்பு செய்து, கழிப்பிட வசதியை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். ரேஷன் கடைகளில் தேங்கியுள்ள சாக்கு பைகளை திரும்பப்பெற வேண்டும். ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
குறிப்பாக, வெளிமாவட்ட கார்டுதாரர்களுக்காக, 10 சதவீதம் கூடுதல் பொருள் ஒதுக்கீடு வழங்குவதை மாவட்ட நிர்வாகம் ஆய்வின் மூலமாக உறுதி செய்ய வேண்டும். வரும் ஏப்., 20ம் தேதி, புதுக்கோட்டையில் நடக்கும் மாநாட்டில் திருப்பூரில் இருந்து திரளானவர்கள் பங்கேற்க வேண்டுமெனவும் முடிவு செய்யப்பட்டது.