/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆர்.எம்.எஸ்., ஆபீஸ் முன்பு வாகனங்கள் நிறுத்த தடை
/
ஆர்.எம்.எஸ்., ஆபீஸ் முன்பு வாகனங்கள் நிறுத்த தடை
ADDED : ஆக 19, 2024 11:27 PM

திருப்பூர்;திருப்பூர், ரயில்வே ஸ்டேஷனில் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ் கட்டுமான பணி நடப்பதால், பார்க்கிங் பெரும் இடையூறாக உள்ளது. இதனால், ரயில்வே ஸ்டேஷனுக்கு வருவோர், ஆர்.எம்.எஸ்., வளாகத்தில் வாகனத்தை நிறுத்தி விடுகின்றனர். இரவு நேரங்களில் ஆர்.எம்.எஸ்., அலுவலகத்துக்கு வரும் பார்சல்களை ஏற்றி, இறக்குவதற்கு பெரும் இடையூறாக உள்ளது. இதனால், ஆர்.எம்.எஸ்., அலுவலகத்துக்கு வரும் வாகனங்கள் தவிர, பிற வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. மீறினால், நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.
----
திருப்பூர், ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில், ஆர்.எம்.எஸ்., அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை.