/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை
/
பொது இடங்களில் புகைப்பிடிக்க தடை
ADDED : மே 06, 2024 11:14 PM
திருப்பூர்:கடந்த 2008 அக்., 2ம் தேதி முதல், பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, பொது இடங்களில் புகை பிடிப்பது குற்றமாக கருதி, 200 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். சில ஆண்டுகள் மட்டும் பின்பற்றிய இந்த உத்தரவு, நாளடைவில் காற்றில் பறந்துவிட்டது.
இந்நிலையில், பொது இடங்களில் புகை பிடிக்க கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழ்நாடு மின்சார பொது ஒப்பந்த தொ.மு.ச., மாநில இணை பொதுசெயலாளர் சரவணன், இதுதொடர்பாக, தமிழக முதல்வருக்கு நேற்று மனு அனுப்பியுள்ளார்.
மனுவில், 'அரசு உத்தரவுப்படி, பொது இடங்களில் புகை பிடிக்க தடை விதிக்கப்பட வேண்டும். பொது இடத்தில் புகை பிடித்தால், அபராதம் விதிக்கப்பட வேண்டும்,' என்று தெரிவித்துள்ளார்.