/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
வடக்கு குறுமைய ேஹண்ட்பால் வித்யா மந்திர் பள்ளி அபாரம்
/
வடக்கு குறுமைய ேஹண்ட்பால் வித்யா மந்திர் பள்ளி அபாரம்
வடக்கு குறுமைய ேஹண்ட்பால் வித்யா மந்திர் பள்ளி அபாரம்
வடக்கு குறுமைய ேஹண்ட்பால் வித்யா மந்திர் பள்ளி அபாரம்
ADDED : ஆக 23, 2024 02:22 AM

திருப்பூர்/திருப்பூர் வடக்கு குறுமைய மாணவியர் ஹேண்ட்பால் போட்டி, பூலுவபட்டி, ஏ.பி.எஸ்., பள்ளியில் நேற்று நடந்தது. பதினான்கு வயது பிரிவில், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணி 10 - 0 என்ற புள்ளிக்கணக்கில் வித்யா மந்திர் பள்ளி அணியை வென்றது. 17 வயது பிரிவில் துவக்கத்திலே சுதாரித்து ஆடிய, வித்யா மந்திர் பள்ளி அணி, 4 - 3 என்ற புள்ளிகளுடன், இன்பேன்ட் ஜீசஸ் பள்ளி அணியை வென்றது. 19 வயது பிரிவில் விளையாடிய வித்யா மந்திர் பள்ளி, 6 - 3 என, ஜெய்வாபாய் பள்ளி அணியையும் வென்றது.
கோ கோ போட்டி
நெருப்பெரிச்சல் திருமுருகன் மெட்ரிக் பள்ளியில், வடக்கு குறுமைய மாணவியர் கோ கோ போட்டி நடந்தது. 14 மற்றும் 17 வயது பிரிவில், தலா, 14 அணிகளும், 19 வயது பிரிவில், எட்டு அணிகளும் என மொத்தம், 36 அணிகள் பங்கேற்றன. 'நாக் அவுட்' சுற்றுகளாக போட்டிகள் நடந்த போதும், 19 வயது பிரிவில் இறுதி போட்டி மட்டுமே நேற்று நடந்தது.
இதில், ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளி மேல்நிலைப்பள்ளி முதலிடம், அனுப்பர்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி அணி, 2 வது இடம் பெற்றது. நேரமின்மை காரணமாகவும், அணிகள் பதிவு அதிகம் என்பதாலும், 14 மற்றும், 17 வயது பிரிவு அரையிறுதி, இறுதி போட்டி இன்று நடக்குமென அறிவிக்கப்பட்டது.