/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மொபைல் போன் வழிப்பறியில் வட மாநில இளைஞர் கொலை
/
மொபைல் போன் வழிப்பறியில் வட மாநில இளைஞர் கொலை
ADDED : மே 16, 2024 02:17 AM

திருப்பூர்:திருப்பூர் அருகே கணியாம்பூண்டியில் உள்ள நிட்டிங் மில்லில், பீஹாரை சேர்ந்த ஆகாஷ்குமார், 22, என்பவர் செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு பணி முடிந்து தன் அறைக்கு நடந்து சென்றார். அப்போது, அவ்வழியாக டூ - வீலரில் வந்த, மூன்று பேர், ஆகாஷ்குமாரின் வயிற்று பகுதியில் கத்தியால் குத்தி, போனை பறித்து தப்பினார்.
இதனால், ரத்தம் கொட்டிய நிலையிலும், தன் அறைக்கு சென்ற ஆகாஷ்குமார் நடந்த விபரத்தை , நண்பர்களிடம் கூறினார். உடனடியாக அவரை, திருப்பூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி நேற்று காலை இறந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
இந்நிலையில், ஆகாஷ்குமாரை கொலை செய்தவர்களை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி, அந்த நிறுவன தொழிலாளர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார், பேச்சு நடத்திய பின், போராட்டத்தில் ஈடுபட்டோர் கலைந்தனர்.
கொலை செய்யப்பட்ட இளைஞரின் குடும்பத்துக்கு, 2 லட்சம் ரூபாய் நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது.