/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ரயிலில் கஞ்சா கடத்தல்; வட மாநில வாலிபர் கைது
/
ரயிலில் கஞ்சா கடத்தல்; வட மாநில வாலிபர் கைது
ADDED : மார் 06, 2025 06:31 AM
திருப்பூர்; வெளிமாநிலத்தில் இருந்து திருப்பூருக்கு விற்பனைக்கு கடத்தி வரப்பட்ட, 14 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து, இருவரை போலீசார் கைது செய்தனர்.
கஞ்சா, குட்கா, போதை மாத்திரை உள்ளிட்ட போதை வஸ்துக்களின் புழக்கத்தை கட்டுப்படுத்தவும், விற்பனை செய்பவர்களை கண்டறிந்து போலீசார் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக வெளி மாநிலங்களில் இருந்து வரும் ரயில்களை கண்காணித்து கைது செய்து வருகின்றனர். இச்சூழலில், நேற்று, ஜார்கண்டில் இருந்து கேரளா செல்லும் தன்பாத் எக்ஸ்பிரஸ் ரயிலில் கஞ்சா கடத்தி வருவது குறித்து தெரிந்து, திருப்பூர் வடக்கு போலீசார் ரயில்வே ஸ்டேஷனில் தீவிர ரோந்து மேற்கொண்டனர்.
ரயிலில் இருந்து இறங்கி, பயணிகளுடன் பயணிகளாக வெளியேறிய ஒடிசா வாலிபரை பிடித்தனர். விசாரணையில், சத்யா தீப், 31 என்பதும், விற்பனைக்காக கஞ்சா பொட்டலம் வைத்திருப்பது தெரிந்தது. நான்கு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து கைது செய்தனர். அதேபோல், தாராபுரம் மதுவிலக்கு போலீசார் தாராபுரம் பகுதியில் ரோந்து மேற்கொண்டனர். நுால் மில் அருகே சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த வடமாநில வாலிபரிடம் விசாரித்தனர். ஒடிசாவை சேர்ந்த ரூபேஷ் மகேத், 26 என்பது தெரிந்தது.
இவர், இடுவம்பாளையத்தில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். தாராபுரத்தில் வடமாநிலத்தினருக்கு கஞ்சா சப்ளை செய்ய, பத்து கிலோ கஞ்சாவை கொண்டு வந்தது தெரிந்தது. அவரை கைது செய்து போலீசார் பறிமுதல் செய்தனர்.