sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, டிசம்பர் 20, 2025 ,மார்கழி 5, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்

/

சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்

சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்

சொல்லில் அல்ல... செயலிலும் சாதித்தாக வேண்டும் கொழுந்து விட்டெழுகிறது 'தற்சார்பு' முழக்கம்! புதிய களம் நோக்கி பின்னலாடை நகரம் அமர்க்களம்


ADDED : ஏப் 27, 2024 02:48 AM

Google News

ADDED : ஏப் 27, 2024 02:48 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துாவப்பட்ட விதை


திருப்பூர் பின்னலாடை தொழில்துறையினர், தொழில்நுட்ப ஜவுளி உற்பத்தியிலும் கால் பதிக்க வேண்டும் என, தமிழக ஜவுளித்துறை கமிஷனர் வள்ளலார், கடந்தாண்டு நவ., மாதம், திருப்பூர் ஏற்றுமதியாளர்களை அறிவுறுத்தினார்; 'திருப்பூரின் சாதனைகளை உலகத்துக்கு தெரியப்படுத்துங்கள்' என்றும் ஊக்கப்படுத்தினார்.

அப்போதுதான், கோவையில் உள்ள முன்னணி தொழில்நுட்ப கல்லுாரிகளுடன் இணைந்து, இயந்திர உதிரி பாகம் மற்றும் புதிய தொழில்நுட்பங்களை கண்டறிவது என்ற முயற்சிக்கு விதை துாவப்பட்டது. அது, படிப்படியாக வளர்ந்து, திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம், 'இயந்திர உதிரிபாகங்கள் தயாரிப்பு முன்முயற்சி துணைக்குழுவை உருவாக்கியுள்ளது.

திருப்பூரில் உள்ள, 'நிட்டிங்', சாய ஆலைகள், 'காம்பாக்டிங்', 'ரெய்சிங்', எம்ப்ராய்டரிங், பிரின்டிங் என, அனைத்து வகை பிரிவுகளிலும், இறக்குமதி செய்த இயந்திரங்கள் அதிகளவு பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு இறக்குமதி இயந்திரத்துக்கும் தேவையான உதிரி பாகங்களும், வெளிநாடுகளில் இருந்தே வரவழைக்கப்படுகின்றன.

கோவையில் உள்ள, 'கொடிசியா', பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி, தென்னிந்திய ஜவுளி ஆராய்ச்சி கழகத்துடன் கரம்கோர்த்து, தேவையான உதிரி பாகங்களை, கோவையிலேயே தயாரிக்கலாம் என உத்தேசிக்கப்பட்டுள்ளது. இதற்கு முத்தாய்ப்பாக முதல்கட்ட ஆலோசனை கூட்டம், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தில் நடந்தது.

உதிரிபாகங்கள்கண்காட்சி


கோவையில் இருந்து, உலகம் முழுவதும் இயந்திரங்களும், உதிரி பாகங்களும் ஏற்றுமதியாகின்றன. கோவை நிறுவனங்களை பயன்படுத்திக்கொண்டால், கோவைக்கு புதிய வர்த்தக வாய்ப்பு கிடைக்கும்; திருப்பூரின் தேவைகளும் பூர்த்தியாகும். அதற்காகவே, 'கொடிசியா' அமைப்புடன் கரம்கோர்த்து, முன்னணி தொழில்நுட்ப கல்லுாரிகள், நிறுவனங்கள் உதவியுடன், உதிரி பாகம், இயந்திர வடிவமைப்பு துவக்கப்படும்.

கொடிசியாவை பொறுத்தவரை, சில மாதங்களாக, ராணுவத்துக்கு தேவையான உதிரி பாகங்களையே உற்பத்தி செய்யும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சிறப்பான உட்கட்டமைப்பு வசதியும் இருப்பதால், திருப்பூருக்கு தேவையான இயந்திரங்களையும் சிறப்பாக உருவாக்க முடியும்.

'நிட்டிங்', 'டையிங்' உட்பட, திருப்பூரின் அனைத்து தொழில் பிரிவுகளும், அதிகம் பயன்படுத்தம், அத்தியாவசிய உதிரி பாகங்கள் கண்காட்சியை, மூன்று வாரத்துக்குள், கொடிசியாவில் நடத்த வேண்டும். கோவை தொழில்துறையினர் பார்வையிட்ட, அவற்றை உள்ளூரிலேயே தயாரிக்கும் முயற்சியை துவக்கலாம் என, முடிவு செய்யப்பட்டுள்ளது.

'ேஹக்கத்தான்' போட்டி


பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரியின் தொழில்துறை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை தலைவர் டாக்டர் கந்தசாமி, ஸ்ரீஈஸ்வர் தொழில்நுட்ப கல்லுாரியின் இயந்திரவியல் துறைத்தலைவர் சுரேஷ்குமார் ஆகியோர், தங்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

கல்லுாரி மாணவர்களிடம், தொழிற்சாலைகள் எதிர்கொள்ளக்கூடிய உற்பத்தி சார்ந்த பிரச்னைகளை குறிப்பிட்டு, அதற்கான தீர்வு காண முயற்சிக்கப்படும். அதற்காக, புதிய கோணத்தில், 'ேஹக்கத்தான்' போட்டிகள் நடத்தி, சிறப்பான ஆலோசனைகளும், தீர்வுகளும், நடைமுறைக்கு ஏற்கப்படும். உதிரி பாகம் தயாரிப்பும் ஊக்குவிக்கப்படும்.

இயந்திரம் மற்றும் உதிரி பாகம் தயாரிக்கும் முயற்சியில், கோவை, திருப்பூர், ஈரோடு உட்பட, தமிழகம் முழுவதும் உள்ள கல்லுாரிகள், தொழில் நிறுவனங்கள், திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கத்தை அணுகலாம்; உதிரிபாகம் தயாரிப்பு தொடர்பான பணிகளை கவனிக்க, பிரத்யேக குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

'நமக்கு நாமே' பாணியில்...

திருப்பூர் மற்றும் கோவை தொழில்துறையை அடுத்தகட்ட வளர்ச்சிக்கு கொண்டு செல்ல, தேவையான இயந்திரங்கள் மற்றும் உதிரி பாகங்களை உள்ளூரிலேயே தயாரிக்க வேண்டும். கோவை, இயந்திர தயாரிப்பு முன்னோடியாக திகழ்கிறது. 'நமக்கு நாமே' திட்டத்தின் அடிப்படையில், தொழிலை அடுத்தகட்டத்துக்கு நகர்த்தி செல்லலாம்; போட்டி நாடுகளை சமாளிக்கும் வகையில், திருப்பூரை சரியாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.- குமார் துரைசாமி, இணைச்செயலாளர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.உள்ளூரில் தயாரிப்பு அவசியம்பின்னலாடைத் தொழிலை பொறுத்தவரை, 90 சதவீத இயந்திரங்கள், ஜப்பான், ஐரோப்பா, அமெரிக்கா, கொரியா, சீனா போன்ற நாடுகளில் இறக்குமதி செய்யப்படுகிறது. உதிரி பாகங்களையும், அங்கிருந்து இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.இறக்குமதி இயந்திர உதிரி பாகங்கள் விலை மிகவும் அதிகம். உற்பத்தி செலவை குறைக்க, உள்ளூரிலேயே இயந்திரம் மற்றும் உதிரி பாகம் வடிவமைக்கப்பட வேண்டும். அதற்காக முயற்சி வெற்றிகரமாக துவங்கியுள்ளது.- சுப்பிரமணியன், தலைவர், திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம்.சார்ந்திருக்கக் கூடாதுகடந்த, 1960ல் துவங்கிய திருப்பூர் பின்னலாடை தொழில், உள்நாட்டு வர்த்தகத்தை கடந்து, ஏற்றுமதியில் சாதித்துள்ளது. இயந்திரம் மற்றும் உதிரி பாகத்துக்கு, வெளிநாடுகளையே சார்ந்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. சார்ந்திருக்கும் நிலையில் இருந்து நிச்சயம் நாம் மாறித்தான் ஆக வேண்டும்.இதற்காக, திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் சங்கம் களமிறங்கியுள்ளது; அனைத்து சங்கங்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால், சார்ந்திருக்கும் நிலையை மாற்ற முடியும். இதற்கு அனைத்து தரப்பு ஒத்துழைப்பும் அவசியமாகிறது.- ரத்தினசாமி, தலைவர், 'நிட்மா'புதிய வளர்ச்சி நிச்சயம்திருப்பூரில் மட்டும், 7,000 'நிட்டிங்' இயந்திரங்கள், 4,000 'எம்ப்ராய்டரிங்' இயந்திரம், பிரின்டிங், காம்பாக்டிங், ரைசிங், டையிங் என, ஆயிரக்கணக்கான இயந்திரங்கள் உள்ளன. அவற்றிற்கு, உதிரி பாகம் தயாரிப்பு என்பது, கோவையில் மாபெரும் தொழில்புரட்சியை ஏற்படுத்தும். திருப்பூரில் எவ்வித முதலீடும் தேவையில்லை. கோவை - திருப்பூர் தொழில்துறை இடையே சரியான ஒத்துழைப்பும், ஒருங்கிணைப்பும் இருந்தால், இருவேறு தொழில் மையங்களும் புதிய வளர்ச்சியை காண முடியும்








      Dinamalar
      Follow us