/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
ஆம்னி பஸ்களால் போக்குவரத்து நெரிசல்; தீர்வு காண கோரி போராட்டம் அறிவிப்பு

ADDED : மார் 28, 2024 11:10 PM
உடுமலை;உடுமலை, பஸ் ஸ்டாண்ட் மற்றும் பழநி ரோட்டிற்கு, கோவை, பொள்ளாச்சி ரோடு, தாராபுரம் ரோடு, தளி ரோடு பகுதிகளிலிருந்து வரும் வாகனங்கள் பைபாஸ் ரோடு வழியாக வருகின்றன.
இந்நிலையில், மாலை நேரங்களில், 20க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள், பைபாஸ் ரோட்டில் பல மணி நேரம் நிறுத்தி, பயணியர் மற்றும் சரக்குகளை ஏற்றி வருகின்றன.
இங்குள்ள வணிக வளாகங்களில் ஆக்கிரமிப்புகள் மற்றும் வரும் பொதுமக்கள் ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்துவதால், பைபாஸ் ரோடு குறுகலாக மாறியுள்ளது.
ஆம்னி பஸ்களும் ரோட்டை மறித்து நிறுத்தப்படுவதால், போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்றன. ஆம்னி பஸ்களை, பஸ் ஸ்டாண்ட் மேற்கு பகுதியில், நிறுத்துவதற்கு இடம் ஒதுக்கியும், பஸ்கள் ரோட்டிலேயே நிறுத்தப்படுகின்றன.
எனவே, பிரதான போக்குவரத்து வழித்தடமாக பைபாஸ் ரோட்டில் ஆம்னி பஸ்களை நிறுத்துவதை தடுக்கவும், அவற்றுக்கு என ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்ற வேண்டும்.
உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், வரும் ஏப்.,1ம் தேதி, மாலை, 7:00 மணிக்கு, மறியல் போராட்டம் நடத்தப்படும், என ஐக்கிய கம்யூ., கட்சி சார்பில், அதன் மாவட்ட செயலாளர் மூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் மனு அளித்துள்ளார்.