/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற அறிவிப்பு
/
சிறுபான்மையின மக்கள் கடனுதவி பெற அறிவிப்பு
ADDED : ஜூன் 12, 2024 12:10 AM
உடுமலை;தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வாயிலாக, தனிநபர் கடன், சுய உதவி குழுக்களுக்கான சிறுதொழில் கடன் கைவினை கலைஞர்களுக்கு கடன், கல்வி கடன் ஆகிய திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டங்களின் கீழ், பயன்பெற, கிறித்துவ, இஸ்லாமிய, சீக்கிய, புத்த, பார்சி மற்றும் ஜெயின் ஆகிய சிறுபான்மையினர்கள், விண்ணப்பங்களை பெற்று, பூர்த்தி செய்து வழங்க வேண்டும்.
கடன் மனுக்களுடன் சார்ந்துள்ள மதத்திற்கான சான்று, ஆதார் அட்டை, வருமானச்சான்று, உணவு பங்கீடு அட்டை அல்லது இருப்பிடச்சான்று, கடன் பெறும் தொழில் குறித்த விபரம், திட்ட அறிக்கை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
கல்விகடனுக்கு விண்ணப்பிக்க பள்ளி மாற்றுசான்றிதழ், உண்மைச் சான்றிதழ், கல்விக்கட்டணங்கள் செலுத்திய ரசீது, மதிப்பெண் சான்றிதழ் ஆகியவற்றின் ஜெராக்ஸ் நகல்களை
சமர்ப்பிக்கலாம்.
இது குறித்து, கூடுதல் விபரங்களுக்கு திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலக தொலைபேசி எண்.0421 2999130 மற்றும் மின்னஞ்சல் முகவரி dbcwotpr@gmail.com- ல் தொடர்பு கொள்ளலாம்.