ADDED : ஆக 04, 2024 05:04 AM

பல்லடம் : தமிழகத்தில், ஜூன் முதல் ஆக., வரை நாவல் பழ சீசன் உள்ளது. நாவல் பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. ஜூன் மாதம் சீசன் துவங்கிய நிலையில், மார்க்கெட்டுகள் மற்றும் ரோட்டோர கடைகளில் நாவல் பழங்கள் அதிக அளவு விற்பனை செய்யப்படுகின்றன. தமிழகம் மட்டுமன்றி கர்நாடகாவில் இருந்தும் இறக்குமதி செய்யப்பட்டு இவை விற்பனை செய்யப்படுகின்றன.
பல்லடம் வட்டாரத்தில் உள்ள அரசு தனியார் அலுவலகங்கள், பொது இடங்களில் ஏராளமான நாவல் மரங்கள் உள்ளன. சீசன் காரணமாக, இவற்றில் முட்டுக்கொத்தாக நாவல் பழங்கள் காய்த்து உதிர்ந்து விடுவது வழக்கமாக உள்ளது. வாகன ஓட்டிகள், பொதுமக்கள் உதிர்ந்து விழும் நாவல் பழங்களை ருசி பார்க்காமல் செல்வதில்லை.
மேலும் சிலர், ஆர்வம் தாங்காமல் மரத்தின் மீது ஏறி பறித்து தின்று, தங்களது ஆசையை பூர்த்தி செய்து கொள்கின்றனர்.