/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
நுாலகம், பள்ளிகளுக்கு இலவசமாக 'ஒரு பண்பாட்டின் பயணம்' நுால்
/
நுாலகம், பள்ளிகளுக்கு இலவசமாக 'ஒரு பண்பாட்டின் பயணம்' நுால்
நுாலகம், பள்ளிகளுக்கு இலவசமாக 'ஒரு பண்பாட்டின் பயணம்' நுால்
நுாலகம், பள்ளிகளுக்கு இலவசமாக 'ஒரு பண்பாட்டின் பயணம்' நுால்
ADDED : ஆக 08, 2024 12:18 AM

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்திலுள்ள நுாலகங்கள் மற்றும் பள்ளிகளுக்கு, 'ஒரு பண்பாட்டின் பயணம்' நுால், மாவட்டத்திலுள்ள நுாலகங்கள் மற்றும் அரசு பள்ளிகளுக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது.
ஒடிசா மாநில முன்னாள் தலைமை ஆலோசகர் பாலகிருஷ்ணன் எழுதியுள்ள 'ஒரு பண்பாட்டின் பயணம்; சிந்து முதல் வைகை வரை' என்ற நுால் அறிமுகம்; பொது நுாலகங்கள், பள்ளிகளுக்கு இந்த நுாலை இலவசமாக வழங்கும் விழா, கலெக்டர் அலுவலக அரங்கில், ஆறுமுகம் அறக்கட்டளை; அனிதா டெக்ஸ்காட் இந்தியா நிறுவனம் சார்பில் நடந்தது.
மேயர் தினேஷ்குமார், மாநகராட்சி கமிஷனர் பவன்குமார், அயலக தமிழர் நலவாரிய தலைவர் கார்த்திகேய சிவசேனாபதி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நுாலக இயக்குனர் சுந்தர் கணேசன் ஆகியோர் பேசினர்.
கலெக்டர் கிறிஸ்துராஜ், அனிதா டெக்ஸ்காட் நிர்வாக இயக்குனர் சந்திரசேகர் ஆகியோர், நுாலை வழங்க, மாவட்ட நுாலகர் கார்த்திகேயன் பெற்றுக்கொண்டார். இந்த நுால், மாவட்டத்திலுள்ள கிளை நுாலகங்கள், பள்ளிகளுக்கு இலவசமாக வழங்கப்பட்டது.
கலெக்டர் பேசுகையில், ''முன்னாள் மூத்த ஐ.ஏ.எஸ்., அதிகாரியான பாலகிருஷ்ணன், நுாலை, சிறப்பாக உருவாக்கியுள்ளார். மனித குலத்தின் நாலாயிரம் ஆண்டு வரலாற்று தொகுப்பை பேசும் இந்த புத்தகம், காலம் கடந்து நிலைத்து நிற்கும்.
வரலாற்றுச்சிறப்பு மிக்க இந்த புத்தகத்தை, மாணவர்கள், பொதுமக்கள் அனைவரும் படித்து பயன்பெறவேண்டும் என்பதற்காக, நுாலகங்களுக்கு இலவசமாக வழங்கும் ஆறுமுகம் அறக்கட்டளை, அனிதா டெக்ஸ்காட் நிறுவனத்தின் பணி, பாராட்டத்தக்கது.
முதலில் அனைத்து நுாலகர்களும் இந்த புத்தகத்தை முழுமையாக படிக்கவேண்டும். வாசகர்களுக்கு எடுத்துரைத்து, அனைவரையும் வாங்கி படித்து பயன்பெறச் செய்ய வேண்டும்'' என்றார்.
முன்னதாக , நுால் ஆசிரியர் பாலகிருஷ்ணன், புத்தகம் உருவாக்கம் குறித்து பேசினார். கிளாசிக் போலோ நிர்வாக இயக்குனர் சிவராம் நன்றி கூறினார்.