/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பூங்காவில் கஞ்சா விற்பனை: ஒடிசா வாலிபர்கள் கைது
/
பூங்காவில் கஞ்சா விற்பனை: ஒடிசா வாலிபர்கள் கைது
ADDED : மார் 21, 2024 11:38 AM
பல்லடம்:பல்லடம் அருகே, கஞ்சா விற்பனை நடக்கும் பூங்காவாக உள்ள அம்மா பூங்கா பகுதியில், போலீசார் இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
பல்லடம் ஒன்றியம், கரைப்புதுார் ஊராட்சி, அருள்புரம் உப்பிலிபாளையம் பகுதியில், அம்மா பூங்கா உள்ளது. இப்பகுதியில், அடிக்கடி கஞ்சா மற்றும் சட்டவிரோத மது விற்பனை, சமூக விரோத செயல்கள் உள்ளிட்டவை அதிகளவில் நடப்பதாக, அடிக்கடி புகார் எழுந்து வருகிறது. இதனால், பொதுமக்கள் பயன்பட்டுக்காக அமைக்கப்பட்ட அம்மா பூங்கா, கஞ்சா விற்பனை நடக்கும் பூங்காவாக மாறியுள்ளது. இச்சூழலில், நேற்று முன்தினம், இரு வாலிபர்கள் சந்தேகப்படும்படியாக இப்பகுதியில் சுற்றித் திரிவதாக, பொதுமக்கள் பல்லடம் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், ஆய்வு மேற்கொண்ட போலீசார், ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த புலாஷ் புகார் பிகாரா, 24; பிசாப் பாய், 22 ஆகிய இருவரையும் கைது செய்தனர். இவர்கள் விற்பனைக்காக வைத்திருந்த, 250 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பல்லடம் கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.

