/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம்; விவசாயி புகார் அளித்தாரா?
/
அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம்; விவசாயி புகார் அளித்தாரா?
அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம்; விவசாயி புகார் அளித்தாரா?
அதிகாரி ரூ.50 ஆயிரம் லஞ்சம்; விவசாயி புகார் அளித்தாரா?
ADDED : ஆக 02, 2024 05:16 AM
பல்லடம், : வீட்டுமனை உட்பிரிவு செய்து கொடுப்பதற்காக, பல்லடத்தைச் சேர்ந்த வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் 50 ஆயிரம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, கலெக்டருக்கு புகார் மனு அனுப்பப்பட்டு இருந்தது. புகார் மனுவை, பல்லடம் அடுத்த, காரணம்பேட்டையை சேர்ந்த விவசாயி ஒருவர் பெயரில் இருந்தது. இதுகுறித்த விசாரணைக்கு ஆஜராகுமாறு, அந்த விவசாயிக்கு ஆர்.டி.ஓ., ராம்குமார் உத்தரவிட்டார்.
ஆர்.டி.ஓ., விசாரணைக்கு ஆஜரான விவசாயி, தனக்கும், புகார் மனுவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. புகாரில் உண்மை தன்மை இல்லை என கூறினார். அவர் கூறுகையில், 'புகார் மனுவில் குறிப்பிட்டபடி, நான் எந்தவித புகாரும் அளிக்கவில்லை. எனது பெயர், முகவரியை பயன்படுத்தி யாரோ புகார் மனு அனுப்பியுள்ளனர்.
இதுகுறித்து விசாரித்து எனது பெயரில் புகார் அளித்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.