ADDED : ஜூலை 12, 2024 12:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம் அருகே, காடையூர் ஸ்ரீகாடேஸ் வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் விஜயலலிதாம்பிகை தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அன்னதானத்துக்கு உணவு தயாரிக்கும் இடம்; பயன்படுத்தப்பட்ட பொருட்கள் குறித்து ஆய்வு செய்தனர். அன்னதானத்துக்கு தரமான காய்கறி, மசாலா உள்ளிட்ட உணவு பொருட்கள் பயன்படுத்த வேண்டும். தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை பாதுகாப்பாக சேமித்து வைக்கவேண்டும். சுத்தமான குடிநீரையே சமையலுக்கு பயன்படுத்தவேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

