/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
காற்றில் பறக்குது விதிமீறல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
/
காற்றில் பறக்குது விதிமீறல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
காற்றில் பறக்குது விதிமீறல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
காற்றில் பறக்குது விதிமீறல்: கண்டு கொள்ளாத அதிகாரிகள்
ADDED : மார் 21, 2024 11:33 AM

திருப்பூர்:'திருப்பூர், ஊரகப்பகுதிகளில் தேர்தல் நடத்தை விதிமீறலை, அதிகாரிகள் கண்டுக்கொள்வதில்லை' என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ள நிலையில், பொது இடங்களில் அரசியல் கட்சிகளின் கொடி கம்பம், பேனர், சுவரொட்டி போன்ற எதுவும் இருக்க கூடாது; அவை அகற்றப்பட வேண்டும் என, தேர்தல் ஆணையம் கண்டிப்பான உத்தரவிட்டுள்ளது.
ஆனால், அவிநாசி உள்ளிட்ட ஊரகப்பகுதிகளில், இந்த தேர்தல் நடத்தை விதி அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது. வெள்ளியம்பாளையம், அ.குரும்பபாளையம் உள்ளிட்ட பல இடங்களில், அரசியல் கட்சிகளின் கொடி கம்பங்கள் அகற்றப்படாமல், அதே நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பிற ஊரக பகுதிகளிலும், இதே நிலை தான் காணப்படுகிறது.
தன்னார்வ அமைப்பினர் சிலர் கூறுகையில், 'முந்தைய நாட்களில், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்தவுடனேயே, அந்தந்த பகுதியில் உள்ளாட்சி ஊழியர்கள், கொடி கம்பங்களை அகற்றுவது, சுவரொட்டிகளை அப்புறப்படுத்துவது போன்ற பணிகளில் துரிதமாக ஈடுபடுவர்.
ஆனால், இம்முறை, அந்த வேகத்தை அதிகாரிகளிடம் பார்க்க முடியவில்லை. தேர்தல் நடத்தை விதி பின்பற்றப்படுகிறதா என்பதை, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலராக உள்ள கலெக்டர் தான் கவனிக்க வேண்டும்; நடத்தை விதி தொடர்பாக அவர் உத்தரவிட்டும், அலுவலர்கள் உதாசீனப்படுத்துகின்றனர் என்பதுதான், இதுபோன்ற நிலைக்கு காரணம்' என்றனர்.

