/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'மண் கொள்ளை உடந்தை அதிகாரிகள் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்'
/
'மண் கொள்ளை உடந்தை அதிகாரிகள் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்'
'மண் கொள்ளை உடந்தை அதிகாரிகள் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்'
'மண் கொள்ளை உடந்தை அதிகாரிகள் குற்ற வழக்கு பதிவு செய்ய வேண்டும்'
ADDED : ஆக 12, 2024 11:20 PM
பல்லடம்;தமிழகம் முழுவதும் நீர் நிலைகளில் விவசாயிகள் பெயரில் மண் கடத்தல் மாபியாக்கள், கனிம வளங்களை கொள்ளையடிக்கின்றனர்; கனிம வளக்கொள்ளையைத் தடுக்க வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக, தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் அறிவித்திருந்தனர். இதையடுத்து, பல்லடம் தாலுகா அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடந்தது.
தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க சட்ட விழிப்புணர்வு பிரிவு மாநில செயலாளர் சதீஷ்குமார் கூறுகையில், ''பல்லடம் வட்டாரத்தில் புளியம்பட்டி, அனுப்பட்டி, கரடிவாவி, கே.கிருஷ்ணாபுரம், மல்லேகவுண்டம்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் தொடர்ச்சியாக மண் கடத்தல் புகார்கள் எழுந்து வருகின்றன. வருவாய்த் துறையினர் மண் கடத்தலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், பயன்படுத்திய வாகனங்களையும் பறிமுதல் செய்ய வேண்டும். மண் கொள்ளைக்கு துணை போன வி.ஏ.ஓ., ஊராட்சி ஒன்றிய அலுவலர்கள், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுத்து குற்ற வழக்கு பதிய வேண்டும்'' என்றார்.
விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்திய தாசில்தார் ஜீவா, 'தற்போது மண் அள்ள யாருக்கும் அனுமதி வழங்கப்படுவதில்லை; புகார்கள், குற்றச்சாட்டுகள் குறித்து, கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்' என்றார். இதையடுத்து, விவசாயிகள் போராட்டத்தை தற்காலிகமாக கைவிட்டனர்.

