/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
கிராமங்களில் பாழாகும் அரசு கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
/
கிராமங்களில் பாழாகும் அரசு கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கிராமங்களில் பாழாகும் அரசு கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
கிராமங்களில் பாழாகும் அரசு கட்டடங்கள் கண்டுகொள்ளாத அதிகாரிகள்
ADDED : பிப் 25, 2025 10:35 PM
உடுமலை, ;பொதுப்பணித்துறை கட்டடங்கள், கிராமங்களில் பராமரிப்பின்றி பாழடைந்து வருவதுடன், ஆக்கிரமிப்பால், மாயமாகி வருவது குறித்து அத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உடுமலை தாலுகாவில், பி.ஏ.பி., பாசனத்தில், நான்கு மண்டலங்களிலும், 70 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.
இத்திட்டம் செயல்பாட்டுக்கு வந்த போது, கிராமங்களிலுள்ள, பகிர்மான மற்றும் கிளை கால்வாய்கள் கண்காணிப்பில், 'லஸ்கர்' எனப்படும், மடை கண்காணிப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.
இவர்கள் சம்பந்தப்பட்ட கிராமங்களிலேயே தங்கி பணியாற்றவும், மடை திறத்தல் உட்பட பணிகளுக்கு தேவையான பொருட்களை பாதுகாப்பாக வைக்கவும், பொதுப்பணித்துறை, நீர் வள ஆதாரத்துறையின் கீழ், கட்டடங்கள் கட்டப்பட்டன. முன்பு, பொதுப்பணித்துறையின், கிராம கிளை அலுவலகங்கள் போல இக்கட்டடங்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன.
இந்நிலையில், மடை கண்காணிப்பாளர்கள் பணியிடங்கள் நிரப்பாதது உட்பட பல்வேறு காரணங்களால், கிராமங்களிலுள்ள, நீர்வள ஆதாரத்துறையின் கட்டடங்கள் பராமரிப்பின்றி பழுதடைய துவங்கின. பெரிசனம்பட்டி, புக்குளம், பூலாங்கிணறு, கொங்கலக்குறிச்சி உட்பட பல கிராமங்களில், கட்டடங்கள் பாழடைந்து காணப்படுகின்றன.
தங்கள் துறைக்குரிய கட்டடத்தின் அவல நிலையை நீர் வளத்துறையும் கண்டுகொள்வதில்லை; அரசு கட்டடங்களை பராமரித்து, புதுப்பிக்கும், பொதுப்பணித்துறையின் கட்டட பிரிவு அதிகாரிகளும் கண்டுகொள்ளவதில்லை.
யாருக்கும் பயன்படாமல், வீணாகி வரும் கட்டடங்களை புதுப்பித்து, மாற்று தேவைக்காவது பயன்படுத்தலாம் என பல முறை வலியுறுத்தியும், பொதுப்பணித்துறையினர் கண்டுகொள்ளவில்லை.
அரசு நிதியில் கட்டப்பட்டு, சமூகவிரோத செயல்களுக்கு மட்டும் தற்போது, பயன்பட்டு வரும், கட்டடங்களின் நிலை குறித்து, திருப்பூர் மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.