/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
12 ஆண்டுக்கு பின் மீண்டும் மஞ்சளுக்கு பழைய விலை
/
12 ஆண்டுக்கு பின் மீண்டும் மஞ்சளுக்கு பழைய விலை
ADDED : மே 06, 2024 11:27 PM
பொங்கலுார்;ஓராண்டு பயிரான மஞ்சள் சாகுபடிக்கு நல்ல நீர் வளம், மண்வளம் தேவை. திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில் மஞ்சள் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. 2012 மஞ்சள் அறுவடை துவங்கும் முன் ஒரு குவின்டால்,12,000 ரூபாய்க்கு விலை போனது. அதன் பின் அபரிமித விளைச்சல் காரணமாக மஞ்சள் விலை தடாலடியாகச் சரிந்து குவின்டால், 3, 300 ரூபாய்க்கு விற்பனையானது. இதனால் மஞ்சள் விவசாயிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தொடர்ந்து மஞ்சள் விலை, 12 ஆண்டுகளாக பெரிய அளவில் உயரவில்லை. ஈரோடு சந்தையில் ஏழு லட்சம் மஞ்சள் மூட்டைகள் பல ஆண்டுகளாக தேங்கி கிடந்தது. பல விவசாயிகளின் மஞ்சள் உளுத்து மண்ணாகிப் போனது.
உற்பத்தி செலவு அதிகரிப்பு, கட்டுப்படியான விலை கிடைக்காமை, தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் சாகுபடி மிகவும் குறைந்துவிட்டது. பல விவசாயிகள் மஞ்சள் சாகுபடி செய்வதையே நிறுத்தி விட்டனர்.
தற்போது இருப்பு மஞ்சளும் குறைந்துள்ளது. புது மஞ்சள் வரத்தும் குறைந்ததால், 12 ஆண்டுகளுக்கு முன் விற்பனையான, 18,000 ரூபாய்க்கு ஒரு குவின்டால் மஞ்சள் விலை போகிறது. பழைய விலை கிடைக்க விவசாயிகள், 12 ஆண்டுகள் காத்திருந்தனர்.