/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
விண்ணை முட்டிய 'ஓம் சக்தி... பராசக்தி' கோஷம் பக்திப்பெருக்குடன் குண்டம் இறங்கிய பக்தர்கள்

ADDED : மார் 01, 2025 06:31 AM

அவிநாசி; அவிநாசி, காந்திபுரம், அங்காள பரமேஸ்வரி கோவிலில், 80வது நந்தா தீப குண்டம் திருவிழா நடந்தது. பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
அங்காள பரமேஸ்வரி கோவிலில், 80வது நந்தா தீப குண்டம் திருவிழா, 17ம் நந்தா தீபம் ஆரோகணத்துடன் துவங்கியது. அம்மன் சாட்டு விழா, மகா சிவராத்திரி அன்று கொடியேற்றம் நடந்தது.
நேற்று காலை சிம்ம வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் அங்காளபரமேஸ்வரி அம்மன் எழுந்தருளி ரத வீதிகளில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
பக்தர்களின், 'ஓம் சக்தி.. பராசக்தி' கோஷத்துடன், பம்பை வாத்தியம் முழங்க பெண்கள் உட்பட திரளான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
இரவு, ரிஷப வாகனத்தில் அம்மன் எழுந்தருளி ரதவீதிகளில் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
குண்டம் திருவிழாவில், இன்று வேடுபறி, பரிவேட்டை, தெப்பத்தேர் நிகழ்ச்சியும், நாளை கொடியிறக்கம், மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.
வரும் 3, 4ம் தேதிகளில் பேச்சியம்மனுக்கு அபிஷேக பூஜை, மகா அபிஷேகம் உற்சவத்துடன் குண்டம் திருவிழா நிறைவு அடைகிறது.
அவிநாசி ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அறக்கட்டளை மற்றும் விழா குழு சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.