/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
மாநகராட்சி பள்ளியில் ஆன்லைன் அட்மிஷன்
/
மாநகராட்சி பள்ளியில் ஆன்லைன் அட்மிஷன்
ADDED : ஏப் 30, 2024 11:07 PM

திருப்பூர்:மாநகராட்சி பள்ளிகளில் அதிக மாணவியர் படிக்கும் திருப்பூர், ஜெய்வாபாய் பள்ளியில், ஆன்லைன் மூலம் அட்மிஷன் துவங்கியது.
திருப்பூரில் உள்ள, ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளியில், 5,785 மாணவியர் படிக்கின்றனர்; மாநிலத்தில் அதிகளவு மாணவியர் கல்வி கற்கும் மாநகராட்சி பள்ளி இது.
இங்கு, 2024 - 25ம் கல்வியாண்டில், மாணவியர் சிரமமின்றி பள்ளியில் இணைய ஏதுவாக, ஆன்லைன் வாயிலாக அட்மிஷன் துவங்கப்பட்டுள்ளது.
மாணவியர், பெற்றோர் www.jaivabaimghss.com என்ற பள்ளியின் இணையதள முகவரியில் மாணவி பெயர், பெற்றோர் பெயர், மொபைல் எண், முகவரி, ஏற்கனவே படித்த பள்ளி உள்ளிட்ட விபரங்களை பதிவு செய்தால், எந்த தேதியில் பள்ளிக்கு அட்மிஷனுக்கு வர வேண்டும் என்ற விபரம் அனுப்பி வைக்கப்படுகிறது. இதற்கென தனி ஆசிரியர் குழு பணியாற்றுகிறது.
தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா கூறுகையில், ''ஆறாம் வகுப்பில் மட்டும் 400க்கும் அதிகமானோர் பயில்கின்றனர். ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அதிக மாணவியர் எங்கள் பள்ளியில் இணைவர். மாவட்ட கல்வித்துறை வழிகாட்டுதல்களைப் பின்பற்றி ஆன்லைன் அட்மிஷன் நடந்து வருகிறது.
''ஆன்லைன் மூலம் மாணவியர் அட்மிஷன் நடப்பதால், வெளிமாவட்டங்களுக்கு சென்றுள்ள பெற்றோர், பள்ளிக்கு தொலைவில் உள்ள பெற்றோருக்கு மிக உதவிகரமாக உள்ளது,'' என்றார்.