/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'இறையருள் மட்டுமே கடைசி வரை காக்கும்'
/
'இறையருள் மட்டுமே கடைசி வரை காக்கும்'
ADDED : ஜூலை 19, 2024 11:10 PM
திருப்பூர்;ஹிந்து அன்னையர் முன்னணி சார்பில், திருப்பூர் ஸ்ரீகோட்டை மாரியம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தி, மஞ்சள் நீர் ஊர்வலம் நடைபெற்றது.
விழாவுக்கு, ஹிந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் தலைமை வகித்தார். அவிநாசி வாகீசர் மடாலயம் காமாட்சிதாச சுவாமி, காமாட்சிபுரி ஆதீனம், பஞ்சலிங்கேஸ்வர சுவாமி ஆசியுரையுடன் ஊர்வலம் துவங்கியது. மாநகராட்சி கவுன்சிலர் தங்கராஜ், ஊர்வலத்தை துவக்கி வைத்தார்.
பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் பேசுகையில், ''தாய்மார்கள், சிரசில் வைத்து மஞ்சள் நீரை எடுத்துச்சென்று அபிேஷகம் செய்யும் போது, அம்மன் மகிழ்ந்து வரங்களை அள்ளிக்கொடுப்பாள். ஒரு பக்தனுக்கு, எப்போது எந்த வரத்தை கொடுக்க வேண்டுமென, இறைவனுக்கு தெரியும். பணம் கோடி கோடியாக இருந்தாலும் கடைசிவரை உடன் வராது; இறையருள் மட்டுமே, எப்போதும் உடனிருந்து காப்பாற்றும்,'' என்றார்.
சந்திராபுரத்தில் நடந்த நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, 'அயோத்தி ராமன் வந்தான்' பாடல் பாடிய சிந்துஜாவின் ஆன்மிக சொற்பொழிவும் இடம்பெற்றது.