/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பல்லடத்தில் இருந்து அவிநாசிக்கு ஒரேயொரு பஸ்! அதுவும் பயனற்ற நேரத்தில் வீணாகுது பயணம்
/
பல்லடத்தில் இருந்து அவிநாசிக்கு ஒரேயொரு பஸ்! அதுவும் பயனற்ற நேரத்தில் வீணாகுது பயணம்
பல்லடத்தில் இருந்து அவிநாசிக்கு ஒரேயொரு பஸ்! அதுவும் பயனற்ற நேரத்தில் வீணாகுது பயணம்
பல்லடத்தில் இருந்து அவிநாசிக்கு ஒரேயொரு பஸ்! அதுவும் பயனற்ற நேரத்தில் வீணாகுது பயணம்
ADDED : ஜூலை 24, 2024 11:58 PM
பல்லடம் : பல்லடம் - -அவிநாசி வழித்தடத்தில் ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயங்கி வரும் நிலையில், அதுவும் பயன்பாடற்ற நேரத்தில் இயங்கி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
பல்லடத்தில் இருந்து அவிநாசி ரோடு, மங்கலம் - வஞ்சிபாளையம் வழியாக அவி நாசியை இணைக்கிறது. இந்த வழித்தடத்தில், கல்லம்பாளையம், சேடபாளையம், வேலம்பாளையம், மங்கலம், வஞ்சிபாளையம், புதுப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன.
மேலும், ஏராளமான அரசு தனியார் பள்ளிகள், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவையும் இந்த வழித்தடத்தில் உள்ளன. தினசரி, பள்ளி செல்லும் மாணவ மாணவியர், தொழில், வேலை, வியாபாரம் என, பல்வேறு பணிகளுக்காக வந்து செல்லும் பொதுமக்கள் பெரும்பாலும் அரசு பஸ்சையே நம்பி உள்ளனர். ஆனால், இந்த வழித்தடத்தில் இயங்கி வருவதோ ஒரே ஒரு அரசு பஸ். அதுவும் பொதுமக்களுக்கு பயன்படாத நேரத்தில் இயங்கி வருகிறது.
பொதுமக்கள் கூறியதாவது:
தொழில் நகரங்களான பல்லடம்- - அவிநாசி இடையே அதிகப்படியான மக்கள் போக்குவரத்து உள்ளது. தினமும் வேலைக்குச் செல்பவர்கள், பள்ளி செல்லும் மாணவர்கள் உள்ளிட்டோருக்கு போதிய பஸ் வசதி இந்த வழித்தடத்தில் கிடையாது.
பல்லடம் -- அவிநாசி வழித்தடத்தில், 'ஏ-7' என்ற ஒரே ஒரு அரசு பஸ் மட்டுமே இயங்கி வருகிறது. பல்லடத்தில் இருந்து காலை 5:30, மதியம் 12:40 மற்றும் 3:00 மணி என, மூன்று முறை மட்டுமே இயங்குகிறது. பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்லும் தொழி லாளர்கள் என, யாருக்குமே பயன்படாத வகையில் இந்த பஸ் இயங்குகிறது.
போதிய பஸ் வசதி இன்றி பள்ளி மாணவர்கள் பெரும்பாலும் தனியார் வாகனங்களை பயன்படுத்தி பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். தொழிலாளர்கள் பலர், திருப்பூர் சென்று அங்கிருந்து அவிநாசி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இது ஏழை, நடுத்தர குடும்பங்களைச் சேர்ந்த பலரையும் பாதித்து வருகிறது.
எனவே, போக்குவரத்து கழக அதிகாரிகள் உரிய ஆய்வு மேற்கொண்டு, பொதுமக்கள் பயன்படும் வகையில் இந்த வழித்தடத்தில் கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

